
திருமணம் செய்வதாக நகை,பணம் பெற்று மோசடி: ஏமாற்றிய காதலன் மீது ’பிக்பாஸ்’ புகழ் ஜூலி போலீஸில் புகார்
திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம், நகைகளை பெற்று மோசடி செய்து விட்டதாக காதலன் மீது பிக் பாஸ் புகழ் ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சஞ்சீவ் மாஸ்டராக மாறியதைப் பார்த்து...ஒரு நிமிடம் பிக் பாஸ் அணியே மிரண்டு போய்விட்டதே

ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் நாயகி ஜூலி
சென்னை பரங்கி மலை ஈரோப்பியன் லேன் பகுதியை சேர்ந்தவர் மரியா ஜூலியானா (26). இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷமிட்டு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்று உலகெங்கும் பிரபலமானார். அதன் பின்னர் அம்மா தாயே என்கிற திரைப்படத்தில் நடித்தார், சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

மோசடி செய்த காதலர்
இவர் நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரில் "அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26). அண்ணா நகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு மனிஷ் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்தோம்.

காதலனுக்கு பணம், நகை செலவு செய்த ஜூலி
கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததால் மனிஷ் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தார். இதனால் மனிஷுக்கு இருசக்கர வாகனம்,16 கிராமில் தங்க செயின், ஃபிரிட்ஜ் என 2.30 லட்ச ரூபாய் வரை செலவு செய்தேன்.

மோசடி செய்து காதலை கைவிட்டதாக இளைஞர் மீது புகார்
இந்த நிலையில் திடீரென மனிஷ் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாக தெரிவித்து காதலை முறித்து கொண்டார். இதனை தொடர்ந்து மனிஷ் தொடர்ந்து என்னிடம் மேலும் பணத்தை பெற தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் காதலன் மனிஷை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.