For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்த செலவில், நிறைந்த மகிழ்ச்சி.. பாங்காங்கில் ஜாலியாக ஹனிமூன் கொண்டாட 6 வழிகள்

சென்னை: திருமண நிகழ்வுகளை திட்டமிடும்போதே ஹனிமூன் எனப்படும் தேனிலவு பற்றியும் திட்டமிடுதல் அவசியம். ஹனிமூன் ஜோடிகளுக்கு பாங்காங் என்பது விருப்பமான ஒரு இடமாகும். புகெட், கோ சமுயி போன்ற பீச்கள் பாங்காங்கை நோக்கி ஹனிமூன் தம்பதிகளை ஈர்க்கின்றன.

இப்படி ஹனிமூன் செல்லும் தம்பதிகள் 6 விஷயங்களை கருத்தில் கொள்வது அவசியம்.

முதல் விஷயம்: பாங்காங்கிற்கு, வருடத்தின் எந்த காலத்தில் செல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வருடத்தின் இறுதியில் இங்கு இதமான தட்பவெப்பம் நிலவும். உங்கள் ஹனிமூன் ட்ரிப் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ளுங்கள். ரிலாக்ஸ்சாக வேண்டுமா, சாகசங்கள் செய்ய வேண்டுமா அல்லது சிம்பிளாக நகரை சுற்றி பார்க்க வேண்டுமா என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

இரண்டாவது விஷயம்: பாங்காங்கிற்கு செல்ல நிறைய செலவாகும் என்று நீங்கள் கருதலாம். ஆனால், உண்மை நிலை அப்படியில்லை. ஆனால் ஷாப்பிங்கிற்கு பெயர் பெற்ற பாங்காங்கில் எவ்வளவுக்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற பட்ஜெட்டை முன்கூட்டியே போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

மூன்றாவது விஷயம்: டிக்கெட்டை புக் செய்துகொள்ளுங்கள். பொதுவாக 3-4 மாதங்கள் முன்பு டிக்கெட் புக் செய்தால்தான் குறைவான கட்டணத்தில் விமான பயணம் அமையும் என்ற கருத்து உள்ளது. ஆனால் ஏர் ஏசியா போன்ற விமான நிறுவனங்களில் அவ்வப்போது உங்களுக்கு ஆஃபர்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இப்போது கூட சன்சேஷனல் சம்மர் சேல் (Sunsational Summer Sale) என்ற பெயரில் ஆஃபர் வழங்குகிறது ஏர் ஏசியா. ஒருவருக்கு 4499 ரூபாய் மட்டுமே கட்டணம்.

நான்காவது விஷயம்: எதையெல்லாம் பேக் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். உங்களது ஐடி கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஐந்தாவது விஷயம்: சில தம்பதிகள் தங்கள் பெற்றோர் குறித்து பேசி அறிந்துகொள்ள ஹனிமூனை பயன்படுத்துவார்கள். சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகசங்கள் செய்யலாம். சிட்டியில் பைக் ரைடிங் செல்லலாம். முன்கூட்டியே திட்டமிட்டால் ஹனிமூன் மகிழ்ச்சியாக இருக்கும்.

6வது விஷயம்: தங்க வேண்டிய ரிசார்ட்டை முன்கூட்டியே புக்கிங் செய்துகொள்ளவும். நீங்கள் தங்கும் இடம்தான் உங்கள் விடுமுறைக்கால அனுபவத்தை அதிகம் பாதிக்கும். எனவே நல்ல ரிசார்ட்டை புக்கிங் செய்துகொள்ளவும். பாங்காங்கில் பல 5 நட்சத்திர ரிசார்ட்டுகள் உள்ளன. உங்கள் பட்ஜெட்டுக்கும், உங்களது செயல்பாடுகளுக்கும் ஏற்ற ரிசார்ட் எது என்பதை தீர்மானியுங்கள்.

அனைத்து திட்டமிடலும் முடிந்துவிட்டதா பேக்குகளை எடுங்கள், ஏர் ஏசியா விமானத்தில் கிளம்புங்கள். இந்தியாவின் சென்னை, பெங்களூர், கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் இருந்து பேங்காங்கிற்கு விமான சேவையை இயக்குகிறது ஏர் ஏசியா. ஏப்ரல் 23ம் தேதிக்கு முன்பாக ஏர் ஏசியாவில் டிக்கெட் புக் செய்தால் பாங்காங்கிற்கு ஒரு நபருக்கு ரூ.4499 என்ற கட்டணத்தில் டிக்கெட் கிடைத்துவிடும். மிச்சமாகும் பணத்தை வைத்து உங்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை யோசித்து பாருங்களேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X