For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனவரியில் மட்டும் 15.7 லட்சம் இணைப்புகளை இழந்த பி.எஸ்.என்.எல்

Google Oneindia Tamil News

மும்பை: இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் 15.7 லட்சம் தொலைபேசி இணைப்புகளை இழந்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களிலேயே அதிக இழப்பைச் சந்தித்தது பிஎஸ்என்எல் நிறுவனம்தான்.

இந்தியாவில் ஜனவரி மாத நிலவரப்படி மொத்தம் 77.26 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளதாக டிராய் கணக்குத் தெரிவிக்கிறது. இவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ள "ஆக்டிவ்" இணைப்புகள் ஆகும்.

ஜனவரி மாதத்தில் புதிதாக 70 லட்சம் செல்போன் இணைப்புகள் கூடியுள்ளதாம். இதற்கு முக்கியக் காரணம், 2 சிம் வைத்திருப்போர் எல்லாம், கால் ரேட் குறைந்ததன் காரணமாக அவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுதானாம்.

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள்...

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள்...

இந்தியாவில் ஏர்டெல், ஐடியா, வோடோபோன் ஆகியவைதான் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களாக தொடர்ந்து திகழ்கின்றன.

மொத்த இணைப்புகள்...

மொத்த இணைப்புகள்...

இவை மூன்றின் மொத்த செல்போன் இணைப்புகள் மட்டும், நாட்டில் உள்ள மொத்த இணைப்புகளில் 55.22 சதவீதமாகும்.

ஆர்காம் இணைப்புகள்...

ஆர்காம் இணைப்புகள்...

இந்த இணைப்புகளில் 62.2 சதவீதம் ஆக்டிவ் இணைப்புகளாகும். ஆர்காம் இணைப்புகளின் அளவு 68.3 சதவீதமாகும்.

வாட் அ ஐடியா....

வாட் அ ஐடியா....

ஐடியா நிறுவனத்தின் ஆக்டிவ் இணைப்புகளின் அளவு 101.79 சதவீதாகும். இருப்பதிலேயே அதிக அளவிலான ஆக்டிவ் இணைப்புகளை வைத்துள்ளது ஐடியாதானாம்.

ஆக்டிவ் மொபைல் இணைப்புகள்....

ஆக்டிவ் மொபைல் இணைப்புகள்....

ஏர்டெல் நிறுவனத்தின் ஆக்டிவ் மொபைல் இணைப்புகளின் அளவு 96.16 சதவீதமாகும். வோடோபோன் பங்கு 95.70 சதவீதமாகும்.

ஏர்டெல்... வோடோபோன்

ஏர்டெல்... வோடோபோன்

ஏர்டெல் வசம் மொத்தம் 19.3 கோடி இணைப்புள் உள்ளனவாம். வோடோபோன் வசம் 15.52 கோடி இணைப்புகள் உள்ளன.

வாடிக்கையாளர்களைக் கவர்ந்த இணைப்புகள்...

வாடிக்கையாளர்களைக் கவர்ந்த இணைப்புகள்...

கடந்த ஜனவரி மாதம் ஏர்டெல் நிறுவனம் 24.3 லட்சம் புதிய செல்போன் இணைப்புகளை தன் வசம் சேர்த்துள்ளது. வோடோபோன் 17.8 லட்சம் இணப்புகளைச் சேர்த்துள்ளது. ஐடியாவின் அளவு 15.3 லட்சமாகும். ஏர்செல் பங்கு 15.3 லட்சமாகும். பிஎஸ்என்எல் நிறுவனமோ கடந்த ஜனவரி மாதம் 15.7 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது.

மேற்கு வங்கம் டாப்....

மேற்கு வங்கம் டாப்....

மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக அளவிலான ஆக்டிவ் இணைப்புகள் உள்ளன. அதாவது அங்கு 92.91 சதவீத அளவுக்கு உள்ளன. 2வது இடத்தில் மகாராஷ்டிராவும், அடுத்த இடங்களில் அஸ்ஸாம், மத்தியப் பிரதேசமும் உள்ளன.

தமிழ்நாட்டில் குறைவு தான்...

தமிழ்நாட்டில் குறைவு தான்...

தமிழகத்தில் மொத்தம் 75.82 சதவீத ஆக்டிவ் இணைப்புகளே உள்ளனவாம். இதுதான் அனைத்து வட்டங்களிலும் குறைந்த அளவாகும்.

English summary
According to the Indian telecom regulator TRAI, India added 10.23 million “active” connections during the month of January 2014, while it added 7 million total connections during the month. This indicates that several users who hadn’t been using their extra SIM card, began using it since the call rates have gone up and the propensity to use an additional SIM for cheaper calls might have increased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X