For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவத்தில் ஒரு புரட்சி- குறைந்த கட்டணங்கள்! அசத்தும் 500 கோடி சாம்ராஜ்யம்- ஆர்த்தி ஸ்கேன்ஸ்!!!

ஏழை, எளிய மக்களும் விலைமதிப்புள்ள ஸ்கேன்களை குறைந்த விலையில் ஆர்த்தி ஸ்கேன்ஸில் எடுக்கலாம்.

நமது நாட்டில் ஓர் புரட்சி மிக அமைதியாக பலருக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது தற்பொழுது மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஓர் தமிழர்.

எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கேன் குழுமமாக திகழும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜன் அவர்களே அந்த தமிழர்.

 Aarthi scans gives medical service for the patients who are from poor

தென்தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி எனும் கிராமத்தில் பிறந்தார்.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் ன் 85 கிளைகளில் CT ஸ்கேன், MRI ஸ்கேன் மற்றும் லேப் கட்டணங்களை 75 % வரை அதிரடியாக குறைத்தது இந்திய மருத்துவ பரிசோதனை துறையில் குறிப்பாக தமிழகத்தில் ஓர் அதிர்வலையினை உருவாக்கி கொண்டுள்ளது.

ஸ்கேன் துறையில் புரட்சி

நோயாளிக்கு சிகிச்சையினை துவக்கும் முன் மருத்துவரின் முதல் தேடல் என்ன நோய் என்று தெரிந்து கொள்வது. இதற்காக மருத்துவர்கள் பெரிதும் பரிந்துரைப்பது CT ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன்களையே.

இன்றைய நிலவரப்படி MRI ஸ்கேன் எடுக்க குறைந்தது ரூ.8000 ஆகிறது. ஒரு சாமான்யரின் மாத சம்பளமே ரூ.15000 ஆக இருக்கும் பொழுது இந்த ஒரு ஸ்கேனை மட்டும் எடுக்கவே பாதி சம்பளத்தை கட்ட வேண்டியிருக்கும். மீதி மிச்சத்தில் தான் அந்த மாத குடும்பத்தை நடத்தவேண்டும்.இச்சூழலில் அவருக்கு சிகிச்சையை தள்ளி போடுவதை தவிர வேறு வழியில்லை. தாமதமாகும், தள்ளிப்போடும் சிகிச்சை மேலும் உடல் நிலையினை ஆபத்துக்குள்ளாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர்களுக்கு நவீன மருத்துவம் எட்டாக்கனி என்பதே யதார்த்தம்.

 Aarthi scans gives medical service for the patients who are from poor

இந்த யதார்த்தம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, மிகவும் ஏழ்மையான பின்னனியில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்.

எனவே அவர் தமது அனைத்து கிளைகளிலும் ரூ.8000 மதிப்புள்ள MRI ஸ்கேன் கட்டணத்தை ரூ.4000 என்றும் அந்த நாலாயிரமே அதிகம் என்பவர்களுக்கு இரவு 9மணிக்கு மேல் ரூ. 2500 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார்.

அதுபோல் CT ஸ்கேன் கட்டணத்தையும் குறைத்து அதனையும் ரூ. 1000 முதல் 2000 என நிர்ணயம் செய்துள்ளார். இந்த கட்டணமுறை வெளிப்படையாக அனைவருக்கும் பொருந்தும்படி வைத்துள்ளார்.

இந்த சீரிய பணியினை செய்து வரும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜ் அவர்களிடம் இதுபற்றி கேட்ட பொழுது," வருடா வருடம் ஸ்கேன் எடுக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே வருகிறது. மாதம் 15000 சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரால் கூட ரூ.8000 கட்டி ஸ்கேன் எடுக்க திணறுவதை பலமுறை கண்கூடாக பார்த்தேன். இவர்களுக்கே இப்படி எனில் எனது கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் நிலை? ஸ்கேன் எடுக்கவே முடியவில்லை எனில் மேற்கொண்டு எப்படி சிகிச்சை மேற்கொள்வார்கள்? ஏழ்மை ஒருவரது சிகிச்சைக்க்கு தடையாக இருப்பது மிகவும் கொடுமையான விஷயம். எனவே எந்த சூழலிலும் ஒருவரின் ஏழ்மை நவீன மருத்துவவம் பெறுவதற்க்கு தடையாக அமைய கூடாது .

 Aarthi scans gives medical service for the patients who are from poor

இதற்கு ஒரே தீர்வு, கட்டணங்களை அதிரடியாக குறைப்பது தான்..
அதிரடியாக MRI கட்டணங்களை 75% வரை குறைத்துவிட்டோம்.

குறைவான லாபத்தில் கூடுதலான எண்ணிக்கையிலான நபர்களுக்கு ஸ்கேன் செய்யும் பிஸ்னெஸ் ஸென்சும் மற்றவர்கள் செயல்படுத்த தயங்கும் காரியங்களை தைரியமாக செய்து முடிக்கும் திறமையும் தன் சார்ந்த சமூக மக்களின் மீது அக்கறையும் செய்யும் தொழிலில் மனசாட்சியும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே.

நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. எனவே இது இயன்றது.இது எனது சாதனை என்பதை விட எனது சமுதாய கடமை என்றே கருதுகிறேன்" என எளிமையாக பதில் அளித்தார்
மேலும் அவர் தொடர்கையில்,குறைவான கட்டணத்தில் வெற்றிகரமாக செயல்படலாம் என்பதை கண்டு உணர்ந்த சக ஸ்கேன் உரிமையாளர்கள் சிலர் எமது குறைவான கட்டண முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

இதுவே எனது வெற்றியாக கருதுகிறேன்.

 Aarthi scans gives medical service for the patients who are from poor

இந்த சிலர் இன்னும் பலர் ஆக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதை நிச்சயம் விரைவில் நிறைவேறும். அதற்கான முதல் துவக்கத்தை எனது நிறுவனம் துவக்கியுள்ளது என்பது தான் மிக்க மகிழ்வே.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் சென்னையில் 10 கிளைகளுடன் மதுரை திருநெல்வேலி, பாளை, தென்காசி, கோவில்பட்டி, ராஜபாளையம், தூத்துக்குடி, தஞ்சை மற்றும் பெங்களுர் ஆகிய இடங்களில் அனைத்து ஸ்கேன் மற்றும் லேப் வசதிகளுடன் இயங்கி வருகிறது.

கர்நாடகா பெங்களுரில் உள்ள தனது இரண்டு கிளைகளிலும் குறைவான கட்டணமே பெறுகிறார். விரைவில் அங்கேயும் மற்ற மையங்கள் ஆர்த்தி வழிக்கு வரும்.புதுவையிலும் தனது சென்டர் குறைந்த கட்டணத்தில் செயல்படுகிறது.

robotic lab

விரைவில் ஐதராபாத்திலும் குறைந்த கட்டணம் பெற்று தனது கிளையினை துவக்க உள்ளது.
மேலும் 65 இடங்களில் பிரத்யோக இரத்தப் பரிசோதனை மையங்களை அமைத்துள்ளனர்.

நாளொன்றுக்கு ஒரு சென்டரில் சராசரியாக நூறு பேர் என மாதத்திற்க்கு சுமார் 1,20,000 பேர் குறைவான கட்டணத்தில் பலன் அடைகின்றனர்.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் குடும்பத்தில் உள்ள ஏழு டாக்டர்கள் தலமையில் அனைத்து ரிப்போர்டுகளையும் கவனமுடன் பார்த்து தருவது இவர்களின் தனிச்சிறப்பு.

கதை இதனுடன் முடியவில்லை.

இரத்த பரிசோதனை துறையில் மிகப்பெரிய சந்தை புரட்சியினை துவக்கி விட்டார்.

சென்னை வடபழனியில் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதல் முழு ரோபோட்டிக் பரிசோதனை கூடத்தை நிறுவியுள்ளார். இதில் பரிசோதனைகளை விரைவாகவும் முடிவுகளை மிக துல்லியமாகவும் பெறலாம். அதை விட மிக குறைவான செலவினத்தில் இதை இயக்க இயலும். அதன் பயனை அப்படியே பொது மக்களுக்கு சென்றடையும் வகையில் கட்டணங்களை நிர்ணயித்துள்ளார். அனைத்து இரத்த பரிசோதனைகளின் கட்டணங்கள் மற்ற லேப் கட்டணங்களை விட 50% முதல் 75 % வரை குறைவாக உள்ளது.

 Aarthi scans gives medical service for the patients who are from poor

அனைவராலும் எளிதில் பெற இயலாத மத்திய அரசு வழங்கும் தரக்கட்டுப்பாட்டுக்கான NABL & NABH சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். இந்த சான்றிதழ்கள் தனது தரத்திற்க்கான அங்கீகரம் என கருதுகிறார்.

இவரது தனிப்பட்ட வருத்தம் என்னவென்றால் நமது மருத்துவ சமூகம்
சர்க்கரை நோய்க்கு நமது சமூகம் தர வேண்டிய கூடுதல் கவனம் தரவில்லை என்பது. ஏனெனில் சர்க்கரை நோயின் சமூக பொருளாதர பாதிப்பு மற்ற நோய்களான போலியோ, எய்ட்ஸ், TB போன்றவற்றை விட பல மடங்கு அதிகம்.

எனவே அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி சுகர் டெஸ்டுக்கு கட்டணம் ரூ.20 எனவும் ரூ.450 மதிப்புள்ள HbAIC க்கு ரூ.150 நிர்ணயித்துள்ளார். அது போலவே ரூ. 2000 மதிப்புள்ள வைட்டமின் D க்கான கட்டணம் ரூ 400 சுகர் டெஸ்டுகள் மட்டுமல்ல மற்ற அனைத்து டெஸ்டுகளும் குறைவான கட்டணங்களில் கிடைக்கிறது. தமிழகத்தில் இதைவிட குறைவான கட்டணங்கள் கிடையாது என்பதை உறுதியிட்டு கூறலாம். குறைந்த கட்டணங்கள் ஏழைகளின் தயக்கத்தை போக்கும் என்பது இவரது கோட்பாடு. இதன் பயனை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் இதுவரை தமிழகத்தில் 60க்கு மேற்பட்ட ஊர்களில் தனது கிளைகளை துவக்கியுள்ளார். மேலும் 100க்கு மேற்பட்ட ஊர்களில் விரைவில் துவங்க உள்ளனர்.

பல வழிகளிலும் விளம்பரம் செய்து குறைந்த கட்டணங்களின் தகவல்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உள்ளார்.

 Aarthi scans gives medical service for the patients who are from poor

அவ்வாறு நிகழும் பொழுது பல லேப்கள் அவர்களின் லேப் கட்டணங்களை நியாமான ரேட்டில் மட்டுமே வைக்க முடியும். லேப் துறையில் கட்டணங்களை, தரத்தினை ஒழுங்குபடுத்துவதில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனரின் பங்கு மிகப் பெரியதாக திகழும்.

தொலை தொடர்பில் அம்பானி செய்ததை ஓர் தமிழர் ஸ்கேன் & லேப் பரிசோதனை துறையில் சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கிறார். அம்பானிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம். அம்பானியின் நடவடிக்கையால் மக்கள் பலனடைந்தனர். போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனரின் நடவடிக்கையால் மக்கள் பயன் அடைவர். போட்டியாளர்கள் தாமகவே தம்மை ஒழுங்குபடுத்தி செம்மையடைவர்.

குக்கிராமத்தில் இருக்கும் கடைசி குடிமகனுக்கு உலகின் சிறந்த பரிசோதனைகளை அவனுக்கு கட்டுபடியாகும் கட்டணத்தில் வழங்கி விட்டால் தன் பிறப்பின் பயன் அடைந்து விடுவதாக தன் சுற்றத்தில் இவர் அடிக்கடி கூறுவதாக கேள்வி உண்டு. அதுவும் இவை இந்தியா சைனா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்பார்.

ஒரளவு இதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறலாம்.

dr reporting xray

ஆர்த்தி ஸ்கேன்ஸின் சேவைகளை தெரிந்து கொள்ள http://aarthiscan.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

மேலும் விவரங்களுக்கு 7550075500 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X