எஸ்பிஐ போல சேமிப்புக் கணக்கு வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 50 லட்ச ரூபாய் வரையில் சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.50 சதவீதமாக குறைக்க பேங்க் ஆப் பரோடா முடிவெடுத்திருக்கிறது

ஒரு கோடி ரூபாய்க்கு கீழான சேமிப்புத் தொகைக்கான வட்டி 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி கடந்த வாரம் அறிவித்தது.

After SBI, Bank of Baroda cuts interest rates on savings accounts

பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கியும் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது

50 லட்ச ரூபாய் வரையான இருப்பு வைக்கப்படும் சேமிப்புக் கணக்குக்கு வட்டி 4 சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாக குறைக்கப்படுவதாக வங்கியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டின் சராசரி இருப்புத் தொகை 50 லட்சத்துக்கு மேல் இருந்தால், 4 சதவிகித வட்டி தொடரும் என்றும் அவ்வங்கி கூறியுள்ளது.

இரண்டு பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு கணக்கான வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால், இதர வங்கிகளும் வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகி இருக்கின்றன.

Tamil language is missing in ATMs ATM-ல் கூட காணாமல் போகும் தமிழ்!

சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை பொதுத்துறை நிறுவனங்கள் குறைத்து வருவது வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bank of Baroda has followed suit cutting it to 3.5 per cent on deposits of up to Rs. 50 lakh.
Please Wait while comments are loading...