For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்களில் தமிழகத்துக்கு 18-வது இடம்.. 'டாப்' ஆந்திரா 'டக்கர்' தெலுங்கானா!

இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்களில் தமிழகம் 18-வது இடத்தில்தான் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா இணைந்து முதலிடத்தில் உள்ளன. முதலிடத்தில் இருந்த குஜராத் 3-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 18-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. ஆந்திராவும் தெலுங்கானாவும் முதலிடத்தில் உள்ளன.

இந்திய மாநிலங்களின் தொழில் முதலீடுகள் தொடர்பான உலக வங்கி ஆய்வு அறிக்கையை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

Andhra, Telangana get easiest states to do business

தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த ஆந்திரா தற்போது 1-வது இடத்தை கைப்பற்றியுள்ளது. அதேபோல் 13-வது இடத்தில் இருந்த தெலுங்கானாவும் அதிரடியாக முதலிடத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு 1-வது இடத்தில் இருந்த குஜராத் தற்போது 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படுகிற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகியவை டாப் 10 இடங்களில் உள்ளன.

ஆனால் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான கருதப்படுகிற தமிழகம், கேரளா உள்ளிட்டவை 15 முதல் 20 இடங்களைத்தான் பெற்றிருக்கின்றன. இத்தனைக்கும் தமிழகம் கடந்த ஆண்டு 12-வது இடத்திலாவது இருந்தது. இம்முறை படுகேவலமாக 18-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டிருக்கிறது.

இப்பட்டியலில் கடைசி இடங்களில் அருணாச்சல், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், மேகாலயா, அந்தமான், லட்சத்தீவுகள் உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வெளிப்படையாக மாநிலங்களின் நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. பின் தங்கிய மாநிலங்களில் சீர்திருத்தங்கள் அவசியம் மேற்கொள்ளப்படுவதுதான் அந்த மாநிலங்களுக்கு நல்லது என்றார்.

English summary
According to the latest ranking released by the union commerce and industry ministry, AP and Telangana have jointly emerged as the toppers in the ease of doing business index in the country. Gujarat has slipped to the third position from first rank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X