For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜன் தன் கணக்கில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கிக் கணக்கு முடக்கம் - ஆர்பிஐ

ஜன் தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், வங்கிக் கணக்கை முடக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜன் தன் மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 4 முறை மட்டுமே இலவசமாக தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் தானாகவே வங்கிக் கணக்கு அந்த மாதம் வரை முடக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் இனி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு மாத காலத்திற்கு வங்கி கணக்கை முடக்க ரிசர்வ் வாங்கி உத்தரவு போட்டுள்ளது.

ATM Money withdraw 4 times freeze Jan Dhan accounts

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு அமைந்த உடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகம் செய்தது. இந்த வங்கி கணக்குகளை மத்திய அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களின் உதவி தொகைகள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்கில் சில மாற்றங்களை கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டது.

அதன்படி ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்கில் சில மாற்றங்களை கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு அம்மாதம் முடிவு வரை முடக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க அவசியமில்லை. இந்தநிலையில், ஜன் தன் திட்ட வாடிக்கையாளர்களை, புதிய விதிமுறை என்று ரிசர்வ் வங்கி சிக்கலில் இழுத்து விட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் வங்கிக் கணக்குதாரர்களுக்கு எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளது.

இதன்படி, ஜன் தன் கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வழியில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு மாத இறுதி வரை முடக்கப்படும்; மீண்டும் அடுத்த மாதம் பிறந்த பிறகே அந்தக் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவை 4 முறைக்கு மேல் பணம் எடுக்கப்படும் ஜன் தன் கணக்குகளை அந்த மாத இறுதி வரை முடக்கி வருகின்றன.

எச்டிஎஃப்சி மற்றும் சிட்டி போன்ற தனியார் வங்கிகளோ, ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்துவிட்டால், அந்தக் கணக்கை சாதாரண கணக்காக மாற்றி விடுகின்றன. இவ்வாறு வங்கிக் கணக்கு மாற்றப்பட்டால் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த நேரிடும்

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான வங்கி கணக்கு பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புகாரும் எழுந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நம்ம பணத்தை வீட்டில் வைத்திருந்தாலும் தப்பு, வங்கியில் போட்டு விட்டு தேவைக்கு எடுத்தாலும் தப்பா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி எழுப்பி வருகின்றனர்.

English summary
The Reserve Bank of India (RBI) has gone on a promotion overdrive for the ‘zero balance, zero charges’ account that banks provide.The basic savings bank deposit account was aimed at financial inclusion and, therefore, kept free of all charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X