For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்!!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வு வரைமுறை இல்லாமல், கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் போய்விட்டது!

மொத்தவிலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்துவிட, உணவுப் பணவீக்கம் 18.18 சதவீதமாகிவிட்டது!

குறிப்பாக உணவுப் பொருள்களின் விலையில் அசாதாரண உயர்வு காணப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஒரு ஆண்டில் 245 சதவீதம் அதிகரித்துள்ளது.

மற்ற காய்கறிகளின் விலையில் 77.81 சதவீத உயர்வு காணப்படுகிறது. அரிசி, தானியங்கள், முட்டை, இறைஞ்சி, பால் பொருட்கள் மற்றும் மீன் போன்றவற்றின் விலையிலும் அசாதாரண ஏற்றம் காணப்படுகிறது.

உருளைக் கிழங்கு விலை மட்டும் 15 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில். பருப்பு வகைகளின் விலைகளும் 14 சதவீதம் குறைந்துள்ளது. சர்க்கரை, சமையல் எண்ணெய் வகைகளின் விலையில் பெரிய மாற்றமில்லை.

கடந்த ஜூலையில் பணவீக்கம் 5.79 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8.01 சதவீதமாக இருந்தது.

nflation and Wholesale Price Index

உணவுப் பணவீக்கம் (நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில்) 18.18 சதவீதத்தை எட்டுவது கடந்த மூன்றாண்டுகளில் இதுவே முதல்முறை. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன், "ரூபாய் மதிப்பு வீழ்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம். விரைவில் நிலைமை சரியாகிவிடும்," என்றார்.

English summary
A surprise surge in food prices drove India's inflation to a six-month high, making basic commodities a luxury for several middle class households. According to the latest government data, food inflation accelerated to a three-year high of 18.18 percent in August, driving overall inflation to a higher-than-expected 6.1 percent. Recent hikes in fuel prices also spurred the jump in the Wholesale Price Index.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X