For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய வங்கிகளின் கடன் மதிப்பு இவ்வளவா? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆர்பிஐ

இந்திய வங்கிகளின் கடன் மதிப்பு ரூ.84,78,459 கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி : இந்திய வங்கிகளின் கடன் மதிப்பு ரூ.84,78,459 கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

Banks credit rise Rs 84.78 lakh crore - RBI

இந்திய வங்கிகளின் கடன் மதிப்பு ஆண்டுக்கு 11.52 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி கணக்குப்படி இந்திய வங்கிகளின் கடன் மதிப்பு ரூ.84,78,459 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று இந்திய வங்கிகளின் மொத்த கடன் ரூ.76,01,970 கோடியாக இருந்தது.

வங்கிகள் வழங்கிய கடன் மதிப்பும் மார்ச் 30ஆம் தேதிக் கணக்குப்படி ரூ,86,50,714 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 10.32 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2017ஆம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.78,41,466 கோடியாக மட்டுமே இருந்தது.

அதேபோல வங்கிகளின் டெபாசிட் மதிப்பு 30 ஆம் தேதிக் கணக்குப்படி 6.66 சதவிகிதம் அதிகரித்து ரூ.114 லட்சத்து 74 ஆயிரத்து 989 கோடியாக இருந்தது. இது ஏப்ரல் 13ஆம் தேதி மேலும் உயர்ந்து ரூ.113 லட்சத்து 77 ஆயிரத்து 729 கோடியாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டில் இதன் மதிப்பு ரூ.105 லட்சத்து 38 ஆயிரத்து 304 கோடியாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் வேளாண் சேர்ந்த பணிகளுக்கான கடன் மதிப்பு கடந்த பிப்ரவரியில் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கடன் மதிப்பு

இதனிடையே உலக நாடுகளில் கடன் மதிப்பு 164 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் கூறியுள்ளது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அரசு மற்றும் தனியார் துறைக் கடன் 225 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஐ.எம்.எஃப் கடந்த வாரத்தில் வெளியிட்டுள்ள நிதி கண்காணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டில் இதுபோல கடன் தொகை உச்சத்தில் இருந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பல நாடுகளின் அரசுக் கடன் ஜிடிபியில் 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் கடன் மதிப்பு

உலகின் முக்கிய சந்தைகளாக விளங்கும் நாடுகளிலும், நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளிலும் கடன் மதிப்பு ஜிடிபியில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே உள்ளது. பிரேசிலில் 84 சதவிகிதமும், இந்தியாவில் 70.2 சதவிகிதமும், சீனாவில் 47.8 சதவிகிதமும் ஜிடிபியில் கடன் அளவு காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளிலும் கடன் மதிப்பு உயர்வு விகிதம் அதிகமாகவே உள்ளது. இதில், ஜப்பானின் கடன் மதிப்பு ஜிடிபியில் 236 சதவிகிதமும், இத்தாலியில் 132 சதவிகிதமும், அமெரிக்காவில் 132 சதவிகிதமாகவும் காணப்படுகிறது.

English summary
Banks credit rose 11.52 per cent year-on-year to Rs 84,78,459 crore in the fortnight ended April 13, RBI data showed. In the same period ended April 14, 2017, banks advances were at Rs 76,01,970 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X