For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி, 3ஜி, 4ஜி சேவை: ரிலையன்ஸ்-ஏர்டெல் ஒப்பந்தம்: செல்போன் கட்டணங்கள் குறையும்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Bharti Airtel, Reliance Jio tie up on telecom infrastructure
மும்பை: முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனமும், சுனீல் பார்தி மிட்டலுக்குச் சொந்தமான ஏர்டெல் நிறுவனமும் இணைந்து செயல்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளன.

இதன்படி இரு நிறுவனங்களும் தொலைத் தொடர்பு கட்டமைப்பு சேவைகளை பகிர்ந்து பயன்படுத்திக் கொள்ள உள்ளன. இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கட்டமைப்பு வசதிகள், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான செலவு பாதியாகக் குறையும்.

கண்ணாடியிழை கேபிள் (ஆப்டிக் ஃபைபர்), நகரங்களிடையிலான ஒருங்கிணைப்பு, நீர்மூழ்கி கேபிள் இணைப்பு, செல்போன் டவர், இன்டர்நெட் பிராட்பேண்ட் ஆகியவற்றை இரு நிறுவனங்ளும் பயன்படுத்திக் கொள்ளும்.

எதிர்காலத்தில் இத்துறையில் ஏற்படும் வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. பரஸ்பரம் இரு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் 2ஜி, 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகளை அளிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Mukesh Ambani’s Reliance Jio Infocomm Ltd signed a telecom infrastructure-sharing accord with Sunil Mittal-led Bharti Airtel Ltd, India’s biggest mobile phone services provider, ending the rivalry between two of India’s biggest business groups and charting a new course that may lead to substantial cost savings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X