For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2018: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைகிறது!

மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை தற்போதுள்ள 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியானது தற்போதுள்ள 12 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பாக மோடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Budget 2018: Tax sops for electric vehicles likely

விவசாயம், கிராமப் புற மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதோடு, ஜிஎஸ்டியில் வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் அறிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியானது தற்போதுள்ள 12 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016-17 நிதியாண்டில் இந்தியாவில் 1.75 கோடி இருசக்கர வாகனங்களும், 30.4 லட்சம் பயணிகள் வாகனங்களும் விற்பனையாகியிருந்தன. இந்த பட்ஜெட்டில் வாகன விற்பனையை மேம்படுத்தும் வகையில் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வருமான வரிச் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை கட்டுப்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் செய்வதன் மூலம் சாலை போக்குவரத்தில் 64 சதவிகித எரிபொருளை சேமிக்க முடியும் என்றும் 2030-ம் ஆண்டிற்குள் 37 சதவிகிதம் வரை காற்று மாசு அளவை குறைக்க முடியும். மேவும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மூலம் 2030-ம் ஆண்டு வாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்களில் 6000 கோடி அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்க முடியும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை.

English summary
The Centre may dole out incentives to promote electric vehicles in the country by considering lower goods and services tax (GST) and extending tax benefit for buyers in this week’s Budget for 2018-19, say people aware of the development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X