For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டில் பணம் நிறைய சேரணுமா? பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்க

பணத்தை திட்டமிட்டு செலவு செய்தால் மட்டுமே எதிர்காலத்திற்கு சேமிக்க முடியும். ஒரு ஆண்டிற்கு தேவையான நிதிகளை ஒதுக்க பட்ஜெட் போடுவது போல வீட்டிலும் பட்ஜெட் போடுவது அவசியம்.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கையில வாங்கினேன்... பையில போடல காசு போன இடம் தெரியலே... என்று சிலர் புலம்புவார்கள். எதையும் பட்ஜெட் போட்டு செலவு செய்து சிக்கனமாக சேமித்தால் மட்டுமே கடன் வாங்காமல் பற்றாக்குறையின்றி காலத்தை ஓட்ட முடியும்.

பணத்தை செலவு செய்வதில் சிக்கனமாக இருப்பது வேறு, கஞ்சத்தனம் செய்வது வேறு. சம்பாதித்த பணத்தை ஏன், எதற்கு செலவு செய்கிறோம் என்பதை அறிந்து செலவிடுதற்கு வீட்டு பட்ஜெட் உதவி செய்கிறது. பணத்தை எதற்கு ஒதுக்கியிருக்கிறோமோ அதற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

முதலில் ஒரு நோட்டு, பேனாவை எடுத்து என்னென்ன செலவுகள், மாதாந்திர செலவுகள், அவசிய செலவுகள், அநாவசிய செலவுகள் பற்றி எழுதுங்கள். அவசிய செலவுகளுக்கு தேவையான பணத்தை ஒதுக்கிக்கொண்டு அநாவசிய செலவுகளை எப்படி குறைக்கலாம் என்று யோசிக்கலாம்.

சம்பளபணமும் செலவுகளும்

சம்பளபணமும் செலவுகளும்

சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். உங்களுக்கு 5ஆம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்ததும் அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.

முதல் செலவு சேமிப்பு

முதல் செலவு சேமிப்பு

உங்களின் முதல் செலவே சேமிப்பாக இருக்கவேண்டும். மியூட்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக சேமிக்கும் பணம் என அனைத்திற்கும் முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அத்தியாவசிய செலவுகள்

அத்தியாவசிய செலவுகள்

வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும்.

திட்டமிடுங்கள்

திட்டமிடுங்கள்

அவசிய செலவுகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

மளிகை, காய்கறிகள்

மளிகை, காய்கறிகள்

சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் வரை மிச்சமாகும். காய்கறிகளையும் விலை குறைவாக கிடைக்கும் கடைகளில் வாரத்திற்கு ஒருமுறை வாங்கி வைத்துக்கொள்ளலாம்

அவசர சேமிப்பு

அவசர சேமிப்பு

ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். பேரிடர் கால நிதி போல இதை பயன்படுத்த வேண்டும். மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய இந்த பணத்தை எடுக்கக் கூடாது. இதுதான் அவசரத்திற்கு உதவக்கூடிய பணம். அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் தற்சமயத்திற்கு செலவிற்கு தேவையில்லை எனில் அதை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

மருத்துவ செலவு

மருத்துவ செலவு

வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மருத்துவ செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கியே தீர வேண்டும். மருந்து மாத்திரைகள் வாங்கும் போது மொத்தமாக மாத்திரைகளை வாங்கி வீணடிக்காமல் தேவையான அளவிற்கு மட்டுமே வாங்கினால் பணம் மிச்சமாகும்.

அனாவசிய செலவுகள்

அனாவசிய செலவுகள்

நமக்கு ஒரு பொருள் தேவை, அது அவசியம் என்றால் மட்டுமே வாங்குங்கள். செல்போனோ, எலக்ட்ரானிக் பொருளோ தேவையில்லாமல் வாங்கி இடத்தை அடைக்க வைத்து வேண்டாம். அதற்கு தேவையில்லாமல் இஎம்ஐ கட்ட வேண்டியிருக்கும். அனாவசிய செலவுகளை ஒதுக்குங்கள்.

சீசன் செலவுகள்

சீசன் செலவுகள்

இதே போல தீபாவளி, பொங்கல், ஊர் திருவிழா, உறவினர்கள் திருமணம் என சீசனுக்கு ஏற்ப செலவுகள் வரிசை கட்டும். அந்த செலவுகளுக்கு தேவையான பணத்தை திட்டமிட்டு ஒதுக்கி வைத்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

சிக்கனமான வாழ்க்கை

சிக்கனமான வாழ்க்கை

விலைவாசி நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், சிக்கனத்தின் அவசியத்தைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. சிக்கனம் என்பது எப்போதாவது கடைப்பிடிக்கும் விஷயமாக அல்லாமல், வாழ்க்கைமுறையாகவே மாறிவிட்டால் நன்மைதான்.

பற்றாக்குறையில்லாத பட்ஜெட்

பற்றாக்குறையில்லாத பட்ஜெட்

சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன எடுங்க நோட்டு பேனாவை, போடுங்க பட்ஜெட்டை, சேமிங்க பணத்தை.

English summary
Your budget should also contain some personal savings amounts for retirement savings, college savings, an emergency fund, long-term savings, and any other savings goals you may have. Don’t wait until the end of the month to see what’s left–budget for your savings first.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X