For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு?

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே ஆணையத்தின் பரிந்துரைகளின்படி விரைவில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

மோடி அரசு பதவியேற்பதற்கு முன்னர் முந்தைய அரசால் பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் முறையே 14.2 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டன. ஆனால் பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரயில்வே அமைச்சர் முடிவு செய்துகொள்ளட்டும் என்ற அடிப்படையில் அந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

Cash-strapped railways likely to hike fares…

இந்நிலையில் முந்தைய அரசின் ரயில் கட்டண உயர்வு அறிவிப்பை செயல்படுத்துவோம் என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரயில்வே ஆணைய பரிந்துரைப்படி கட்டண உயர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் இதுகுறித்த இறுதி முடிவை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவிப்பார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

அதே நேரத்தில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், ஆனாலும் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என பிரதமர் அலுவலகத்திடம் ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குறைந்த பட்சம் சாதாரண வகுப்பு கட்டணத்தை உயர்த்தாமல், முதல் வகுப்பு ஏ.சி மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி கட்டணத்தை உயர்த்திக்கொள்ள பிரதமர் மோடி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனாலும் ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தும்பட்சத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணமும் ஓரளவு உயர்த்தப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Faced with huge financial crunch, the railways may soon announce a hike in passenger fares. However, the timing of announcing the revision in fares is still not decided.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X