For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலால் வரியை குறைத்து விட்டோம்... வாட் வரியை குறையுங்கள்- அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, 5 சதவிகித வாட் வரியைக் குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்து.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால் அதன் பயனை விவசாயிகளும் நுகர்வோரும் அனுபவிக்கும் வகையில் அவற்றுக்கான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசுகள் 5 சதவிகிதம் வரையில் குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை தொடர்ந்து சரிவடைந்தது வந்த போதும், மத்திய அரசு பிடிவாதமாக கலால் வரியை உயர்த்திக்கொண்டே வந்தது. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோலுக்கு 11.77 ரூபாயும் டீசலுக்கு 13.47 ரூபாயும் உயர்த்தியது.

குறையாத கலால் வரி

குறையாத கலால் வரி

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரிவடைந்து வந்த போதிலும் கலால் வரியினை மத்திய அரசு குறைக்கவில்லை. மேலும் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி வரையிலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்தது.

 பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

மாற்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையை தினசரி மாற்றியமைப்பது போல, இந்தியாவிலும் தினமும் விலையை மாற்றியமைக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதனையடுத்து, கடந்த ஜூன் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வந்தது. (நீங்கள் விடியற்காலையில் 5.55 மணிக்கு வண்டியை தள்ளிக்கொண்டு போய் பெட்ரோல் நிரப்பப் போனால், பெட்ரோல் நிரப்புபவர் கூலாக, சார்ர்ரி சார் எங்களுக்கு இன்னும் ரேட் வரலை சார், நீங்க ஒரு 6 மணிக்கு அப்புறமா வாங்க என்பார்)

பெட்ரோல் டீசல் விலை உயர்வுகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுகள்

ஜூன் 16ம் தேதியன்று தலைநகரமான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 65.48 ரூபாய்க்கும் டீசல் 54.49 ரூபாய்க்கும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.02 ரூபாய்க்கும் டீசல் 57.41 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. தினசர் விலை மாற்றத்தினால், இரண்டும் படிப்படியாக முறையே 7.80 மற்றும் 5.70 ரூபாய் அதிகரித்து கடந்த செவ்வாய் கிழமையன்று தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 70.81 ரூபாய்க்கும், டீசல் 59.86 ரூபாய்க்கும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73.41 ரூபாய்க்கும், டீசல் 62.23 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்தது.

பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு

மத்திய அரசு தற்போது சற்று இறங்கி வந்து பெட்ரோல் மீதானா கலால் வரியினை 21.48 ரூபாயில் இருந்து 19.48 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரியினை 17.33 ரூபாயில் இருந்து 15.33 ரூபாயாகவும், அதாவது லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து விட்டதால், இன்றைய தேதியில் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68,35 ரூபாய்க்கும் சென்னையில் ஒரு லிட்டர் 70.81 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது.

டீசல் விலை குறைந்தது

டீசல் விலை குறைந்தது

டீசல் விலையானது ஒரு லிட்டர் 56.87 ரூபாய்க்கும் சென்னையில் ஒரு லிட்டர் 59,86 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வருகிறது. இதனால், மத்திய அரசிற்கு நடப்பு நிதி ஆண்டின் மீதமுள்ள அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் 13,000 கோடி ரூபாயும் 2016-17 நிதி ஆண்டின் முழுமைக்கும் சுமார் 26,000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

பெட்ரோலியத்துறை அமைச்சர் பிரதான்

பெட்ரோலியத்துறை அமைச்சர் பிரதான்

பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாங்கள் துரிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கையாக கலால் வரியைக் குறைத்து விட்டோம். இப்போது மாநில அரசுகளின் முறையாகும்.

அருண் ஜெட்லி கடிதம்

அருண் ஜெட்லி கடிதம்

அனைத்து மாநிலங்களும் விற்பனை வரியாக 26 முதல் 38 சதவிகிதம் வரையிலும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதிலிருந்து குறைந்தது 5 சதவிகிமாவது குறைத்து அந்த பயனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்துவோம் என்றார். இது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் விரைவில் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசுகளுக்கு கோரிக்கை

மாநில அரசுகளுக்கு கோரிக்கை

தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதால் அதன் பயனை விவசாயிகளும் நுகர்வோரும் அனுபவிக்கும் வகையில் அவற்றுக்கான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசுகள் 5 சதவிகிதம் வரையில் குறைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கலால்வரி போல வாட் வரி குறைப்பா?

கலால்வரி போல வாட் வரி குறைப்பா?

2014 நவம்பர் மாதத்துக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 11 முறை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கலால் வரி முதன்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல வாட் வரியும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Centre urges to all states to cut VAT by 5% and provide benefit to farmer and consumer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X