For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனு சரிஞ்சதால், கோழி & முட்டை விலை ஏறிப்போச்சு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் திடீரென கோழி மற்றும் முட்டை விலை மடமடவென உயர்ந்துள்ளது.

மீன் விலை உயர்ந்ததால் மக்கள் கோழியை நாடி வந்த நிலையில் தற்போது கோழி விலையும் உயர்ந்துள்ளது.

இதனால் சாப்பாட்டில் "நான்வெஜ்ஜை" விரும்பும் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோழி விலை ஏறிப்போச்சு:

கோழி விலை ஏறிப்போச்சு:

தற்போது உரித்த கோழி கிலோ ரூபாய் 160க்கும், தோலோடு உள்ள கோழி கிலோ ரூபாய் 140 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உயிருடன் உள்ள கோழி கிலோ ரூபாய் 105க்கும் கிடைக்கிறது.

கிலோக்கு 10 அதிகம்:

கிலோக்கு 10 அதிகம்:

கடந்த வாரத்தை விட இப்போது கோழிக்கறி கிலோவுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

தினம் 400 லோடு கோழி:

தினம் 400 லோடு கோழி:

விலை உயர்வு பற்றி தென் சென்னையில் பேபி புரோட்டீன் கோழி கடை நடத்தி வரும் அடையார் துரை கூறியதாவது,"பல்லடம், நாமக்கல், சேலம், சித்தூர், பலமனேரி, வேலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் 400 லோடு கோழி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இன்னும் அதிகமாக கோழி கொண்டு வரப்படுகிறது.

மீன் பிடித்தடை:

மீன் பிடித்தடை:

தற்போது மீன் பிடி தடைகாலம் என்பதால் காசிமேடு, பழவேற்காடு, ராமேசுரம், தூத்துக்குடி பகுதிகளில் மீன் தட்டுப்பாடு உள்ளது. வெளி மாநில மீன்கள் தான் தற்போது சென்னை உள்பட பல ஊர்களுக்கு வருகிறது.

கோழியை நாடும் மக்கள்:

கோழியை நாடும் மக்கள்:

சில்லறை விற்பனையில் மீன் விலை உயர்ந்துள்ளதால் பலர் கோழி கடையை நாடுகின்றனர். இதனால் வழக்கமான விற்பனையை விட இப்போது கறிக்கோழி விற்பனை அதிகரித்துள்ளது.

விலை உயர்வு இதனால்தான்:

விலை உயர்வு இதனால்தான்:

இதனால் கோழிப்பண்ணையாளர்கள் விலையை உயர்த்தி விட்டனர். இதுவே விலை உயர்வுக்கு காரணம் ஆகும்" என்று அவர் கூறினார்.

முட்டை விலையும் உயர்வு:

முட்டை விலையும் உயர்வு:

இதேபோல முட்டை விலையும் உயர்ந்துள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

English summary
Chicken rate raised in Chennai because of fish shortage. A kilo of chicken is sale for 140 to 160 rupees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X