For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிமாட்டு விலைக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல், காஸ் விலை குறையுமா?

Google Oneindia Tamil News

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று 3 சதவீதம் சரிவை கண்ட கச்சா எண்ணெய் 12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 30 டாலராக குறைந்தது.

அமெரிக்காவில் பாறை இடுக்குகளில் கிடைக்கும் ஷேல் வாயுவில் இருந்து அபரிமிதமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுபோல எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகள் வழக்கம் போல் உற்பத்தியை தொடர்கின்றன.

crude oil prices keep falling and falling

13 ஆண்டு பொருளாதாரத் தடையிலிருந்து மீண்டுள்ள ஈரான் முழு அளவில் எண்ணெய் உற்பத்தியை துவக்கி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் நேற்று 3 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 30.41 டாலராக வர்த்தகம் ஆனது இது 2003 டிசம்பரில் இருந்த குறைந்த விலை. அதன்பின் பிற்பகலில் சற்று ஏற்றம் கண்டது.

சர்வதேச அளவில் மோசமான சூழ்நிலை காணப்படுவதால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 10 டாலர் வரை வீழ்ச்சி அடையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சமையல் எரிவாயு விலையும் குறையலாம் என்று தெரிகிறது.

English summary
For the past two years, global crude oil prices have been in free fall, and no one seems to know when the bungee cord will catch. In June 2014, you had to plunk down $110 to buy a barrel of Brent crude. By early 2015, that had plunged to just $60.அமெரிக்காவின் டெக்சாஸ் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் நேற்று 3 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 30.41 டாலராக வர்த்தகம் ஆனது இது 2003 டிசம்பரில் இருந்த குறைந்த விலை. அதன்பின் பிற்பகலில் சற்று ஏற்றம் கண்டது. சர்வதேச அளவில் மோசமான சூழ்நிலை காணப்படுவதால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 10 டாலர் வரை வீழ்ச்சி அடையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X