• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிக்கி மவுஸ்... சோட்டாபீம், லட்சுமி வெடி, யானை வெடி எல்லா வெடிகளும் விற்பனைக்கு வந்தாச்சு

|

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் தீபாவளி நாளை நம்பி ஆண்டு முழுவதும் உழைத்து வருகின்றனர். குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுவதில், பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தாண்டு நவம்பர் ஆறாம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.

தற்போது பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை கடைகளில் களைகட்டியுள்ளது. நீண்ட நேரம் வெடிக்கும் 10 ஆயிரம் வெடி, பூத்தொட்டியில் இருந்து நட்சத்திரம்போல மேல் எழும்பும் புதிய ரக பட்டாசு வரை ஏராளமான பட்டாசு வகைகளும் குவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் பட்டாசுப் பிரியர்களைக் கவரும் வகையில் புதுப்புது பட்டாசு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண வண்ண புகைகளை வெளியிடும் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பிக்பாம் டார்சான் சரவெடி என புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

பிஜிலி முதல் ஆட்டாம் பாம் வரை

பிஜிலி முதல் ஆட்டாம் பாம் வரை

ஆட்டம் பாம், ஹைட்ரோ பாம், கிங் ஆப் கிங், பென்சில், நூறு வாலா முதல் 10 ஆயிரம் வாலா சரவெடிகள், பேன்சி வெடிகள், கண்ணைக் கவரும் ரிப்பீட்டீங் சாட்ஸ், மேனிக் பேன்சி, மல்டி கலர் சாட், ட்ரி கலர் பங்சன்,ஹிப் ஹாப் சில்வம், டோலக்பூர் எக்ஸ்பிரஸ், பிஜிலி கிராக்கர்ஸ், ராக்கெட்டுகள், கண்ணைக்கவரும் பூச்சட்டிகள், தரைச்சக்கரம், மெகா டீலக்ஸ் கிராக்கர்ஸ், ஜெயன்ட் டீலக்ஸ், லட்சுமி வெடி, குருவி வெடி, கிளிவெடி என கண்ணைக் கவரும் காதுகளை பதம் பார்க்கும் பட்டாசு ரகங்கள் விற்பனைக்குக் குவிந்துள்ளன.

கார்ட்டூன்

கார்ட்டூன்

பட்டாசுகளை வெடிப்பதில் பெரியவர்களைவிட சிறுவர்களே அதிக ஆர்வம் காட்டுவர். அதற்காக சிறுவர்களைக் கவரும் வகையிலான பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்களே அதிகம் விற்பனையாகும். அந்த வகையில், வழக்கமான பட்டாசு ரகங்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ஆண்டு புதிய ரக மத்தாப்பு மற்றும் பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பென்டென், சோட்டா பீம், பிளாக் தண்டர், மிக்கிமவுஸ், பக்ஸ்பண்ணி ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு வகைகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளன.

டாம் அன் ஜெர்ரி

டாம் அன் ஜெர்ரி

ஆங்கிரி பேட்ஸ், கிளாஸ் ஆப், கிளான்ஸ், தண்டர்பேடு, லூனி டியூன்ஸ் போன்ற பட்டாசு ரகங்களும், ஸ்டார் ரெயின் பவர் ரெயின், ஹெடெக், ஸ்பிரிங் டிராகன், ருட்டோ, டாம் அண்ட் செர்ரி, மேஜிக்பாப், மைபாட், பைரோ டாப், பாப்கான், டிடு, கோகி டிரிம், யாகூ பவுன்டென், சூப்பர் மேன், ஐயன்மேன், ஐகான், பவர்ரெயின், விலிக்கர், பீகாக், அல்க் என பல புதிய ரக பட்டாசுகள் கலர் கலராக புதுவித வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

பட்டாசு விலை குறைவு

பட்டாசு விலை குறைவு

இந்த தீபாவளிக்கு பல வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருப்பது பட்டாசு பிரியர்களான சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற மத்தாப்பு மற்றும் பட்டாசு ரகங்களுக்கு சிறுவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அள்ளிக்கிட்டு போகலாம்

அள்ளிக்கிட்டு போகலாம்

ஜிஎஸ்டி வரி, பட்டாசு மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களால், இந்தாண்டு பட்டாசுகள் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை குறைந்துள்ளது. பல கடைகளில் 50 சதவிகிதம் தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்படுகின்றன. சிவகாசிக்கு பட்டாசு வாங்கப் போன அள்ளிக்கிட்டு வரலாம். என்ன கிளம்பிட்டீங்களா?

lok-sabha-home

 
 
 
English summary
Deepavali on November 6th, 2018, Crackers sale gear up near Sivakasi. Crackers that blast in the air, weaving numerous patterns in multiple colours, Price ranges between Rs. 100 to Rs. 10,000 a piece. The latter is an item which forms thousand or more formations in the air in multi-colour on a single shot.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more