For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க மாப்பிள்ளையா?.... ஐயோ வேண்டாம்... அலறும் இந்திய மணமகள்கள்

டிரம்ப் நடவடிக்கை ஒருபக்கம் இனவெறி தாக்குதல் மறுபக்கம் மாறி மாறி அமெரிக்க வாழ் இந்திய பணியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருவதால் இந்திய திருமணச்சந்தையில் அவர்களுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது.

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற அதிபர் டிரம்பின் முழக்கம் இந்தியாவில் இருந்து அமெரிக்கவிற்கு பணியாற்ற சென்றவர்களை அதிகமாகவே பாதித்து வருகிறது. இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது ஒருபக்கம் இருக்க இந்திய திருமண சந்தையில் அவர்களுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது.

ஆறு மாதங்களுக்கு ஹெச் 1பி விசா வழங்குவது ரத்து செய்யப்படும் என்று சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தற்போது, ஹெச் 4 விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கணவன் அல்லது மனைவியுடன் செல்பவர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா வழங்கப்படுகிறது. தற்போது இந்த விசாவுக்கும் அமெரிக்கா கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க நீதித்துறை வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ஹெச் -4 விசா பெற்று பணியாற்றி வருபவர்களின் வேலைக்கான அதிகாரத்தை 60 நாட்களுக்கு முடக்கி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடு ஒருபக்கம் மறுபக்கம் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க மாப்பிள்ளை

அமெரிக்க மாப்பிள்ளை

தமிழ் சினிமாவில் அமெரிக்க மாப்பிள்ளைகள் சில சீன்களில் வந்து செல்வார்கள். அதேபோல அமெரிக்காவில் சிலிக்கான் வேலி போன்ற இடங்களில் பணிபுரியும் இந்தியவைச் சேர்ந்த ஐடி பணியாளர்கள் சில மாத விடுமுறைக்கு இந்தியா வந்து இங்குள்ள மணமகள்களை திருமணம் செய்து கொண்டு செல்வார்கள். அமெரிக்க மாப்பிள்ளையேதான் வேண்டும் என்று காத்திருக்கும் இந்திய மணமகள்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

குறையும் மவுசு

குறையும் மவுசு

சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி குற்றங்கள், வன்முறைகள் அமெரிக்காவில் பரவி வருகின்றன. இதனால் இதுவரை வரை அமெரிக்க மாப்பிள்ளைகளைத் தேடி வந்த இந்திய பெண்களின் பெற்றோர்கள், தற்போது அந்த மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர். திருமண இணையதளங்களும் இதை உறுதி செய்கின்றன.

திருமண இணையதளங்கள்

திருமண இணையதளங்கள்

கடந்த 2 மாதங்களாக அமெரிக்க மாப்பிள்ளைக்கான வரன் தேடுதல் 25 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார் திருமண வரனுக்கான ஷாதி டாட் காம் என்ற இணையதளத்தின் மேலாளர் ரிச்சா கர்க் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முதலே அமெரிக்க மாப்பிள்ளைக்களுக்கான மவுசு குறையத் தொடங்கினாலும், பிப்ரவரியில் மிக அதிக அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர்

டிரம்பின் புதிய குடியுரிமை கொள்கைகளைக் கண்டு, இந்தியப் பெண்களின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். தவிர அங்கு பெருகிவரும் இனவெறி சம்பவங்களும் அவர்களை அச்சப்பட வைத்துள்ளது என்றும் திருமண தகவல் மைய இணையதள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

50 சதவிகிதம் சரிவு

50 சதவிகிதம் சரிவு

ஜனவரி மாதம் முதல் அமெரிக்க மாப்பிள்ளையை வரனாக தேடும் பெற்றோர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. திடீரென நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார் மற்றொரு மேட்ரிமோனி டாட் காம் நிறுவத்தின் இயக்குநர்.

இந்தியா திரும்பினால் பெண்

இந்தியா திரும்பினால் பெண்

மத்திய டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான விஜய் சிங் தனது மகளுக்காக கடந்த ஓராண்டாக அமெரிக்க மாப்பிள்ளையைத் தேடி வந்தார். தற்போதய சூழ்நிலையில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்ட அவர், இந்தியா வர விரும்பும் மாப்பிள்ளைக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

என்ஆர்ஐ இளைஞர்கள்

என்ஆர்ஐ இளைஞர்கள்

ஒரு நாட்டில் பிரச்சினை ஏற்படும்போது, என்ஆர்ஐ இளைஞர்களைத் திருமணம் செய்துக்கொள்வதை இந்திய பெண்கள் தவிர்ப்பது இயல்பானது தான் என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த திருமண தகவல் மைய இணையதள உரிமையாளர். தற்போது அமெரிக்காவில் உள்ள சிக்கல்களால் மாப்பிள்ளைகளை இந்தியப் பெண்களும், அவர்களின் பெற்றோரும் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளது என்று சென்னையைச் சேர்ந்த பாரத் மேட்ரிமோனி நிறுவனர் கூறியுள்ளார்.

அமெரிக்கா போக விருப்பமில்லை

அமெரிக்கா போக விருப்பமில்லை

அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் பெண் தேடும் பெரும் பணக்காரர்களுக்கு பெண் கிடைப்பது கடும் சிரமமாக இருக்கிறது. காரணம் மணமகள்கள் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. திருமணம் செய்து கொண்டு இந்தியாவிலேயே வசிக்க விரும்பினால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று கூறி வருகின்றனர். அடப்பாவமே... அமெரிக்க மாப்பிள்ளைகளின் நிலை இப்படியாகிவிட்டதே? பலகோடி வரதட்சணை வாங்கிய அமெரிக்க மாப்பிள்ளை குடும்பத்தினர், இனி பெண் வீட்டாருக்கு நகையும் பணமும் கொடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறினாலும் ஆச்சரியமில்லை.

English summary
President Donald Trump’s strict immigration policies and a spate of hate crimes in that country. Parents are now scared of marrying their daughters off to Indians settled in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X