For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு நெருக்கடி: 186 வழித்தடங்கள் ரத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சன் குழும நிறுவனத்தின் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 186 வழித்தடங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் ரத்து செய்துள்ளது .

மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ய கூடாது என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஒரு மாதத்தில் கட்டணங்களை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் நிறுவன ஊழியர்களுக்கு 10 நாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது .

DGCA's move to restrict SpiceJet's sales window will hurt all airlines: aviation sources

விமான பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் டிக்கெட் விற்பனை செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பைஸ் ஜெட் பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ 1600 கோடி பாக்கிதொகையை திரும்ப செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது .

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்தபின் விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

English summary
Directorate General of Civil Aviation's move to restrict SpiceJet from selling tickets beyond 30 days may be a pro-consumer step but will hurt all airlines, say executives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X