For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில்துறையின் 8 முக்கியப் பிரிவுகளின் வளர்ச்சி சரிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தொழில்துறையின் முக்கியமான எட்டுப் பிரிவுகளிலும் ஜூன் மாதத்தில் பெற்ற வளர்ச்சியானது, ஜூலை மாதத்தில் சரிந்து காணப்பட்டது.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்த அறிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Eight core sectors grow by 6.6 per cent in July

அதன்படி இந்தியாவின் 8 தொழில் பிரிவுகளில் ஜூலை மாத வளர்ச்சியானது 6.6 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, துரப்பண பொருட்கள் (refinery products), சிமெண்ட், உரம், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், ஸ்டீல், மின்சாரம் ஆகியவை அந்த எட்டு பிரிவுகள்.

இந்த எட்டு பிரிவுகளும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெறும் 2.9 சதவீத வளர்ச்சியையே கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நிலக்கரி, துரப்பன பொருட்கள், உரம், சிமெண்ட் ஆகிய துறைகள் முறையே 9.7, 12.3, 1.3, 10.8 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருந்தன. இருப்பினும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் ஜூலை மாதத்தில் எதிர்மறை வளர்ச்சியையே கண்டன. அதாவது வளர்ச்சியே இல்லை.

மறுபக்கம், ஸ்டீல் துறையானது வளர்ச்சி விகிதத்தில் சரிந்துள்ளது (6%). இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9.4 சதவீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது.

நடப்பு நிதியாண்டு காலத்தில் இந்த எட்டு துறைகளும் மொத்தமாக 5.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 2.6 சதவீதமாகவே இருந்தது. ஜூன் மாதம் இந்த எட்டு துறைகளும் 7.6 சதவீத வளர்ச்சியைக் கண்டிருந்தன. அந்த வகையில் பார்த்தால் எட்டு துறைகளும் ஜூலை மாதத்தில் சரிவையே கண்டுள்ளன.

English summary
Eight core sectors grew by 6.6 per cent in July pushed by healthy output in coal, refinery products, cement and fertiliser.The eight core sector -- coal, crude oil, natural gas, refinery products, fertilisers, steel, cement and electricity -- had registered a growth of 2.9 per cent in July last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X