For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரிக் கணக்கு தாக்கல்: ஜூலை 31-ந் தேதி கடைசி நாள்- வருமான வரித்துறை

Google Oneindia Tamil News

சென்னை: 2016-2017-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையானது, வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய ஆன்லைன் முறையை நாடுங்கள் என்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை கூறியிருப்பதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்து வருமான வரித்துறை தற்போது நினைவுபடுத்துகிறது. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள் ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள். ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையானது, வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய ஆன்லைன் முறையை நாடுங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

File ITRs before July 31 deadline: Income Tax department

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக மொத்தம் 9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சகஜ் (ஐடிஆர்-1), ஐடிஆர்-2, ஐடிஆர்-2ஏ, ஐடிஆர்-3, சுகம் (ஐடிஆர்-4எஸ்), ஐடிஆர்-4, ஐடிஆர்-5, ஐடிஆர்-6, ஐடிஆர்-7 ஆகிய படிவங்கள் உள்ளன. சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய் பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்-1) படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய் பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்-2 படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்-2ஏ என்ன படிவத்தை பயன்படுத்த கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர்-1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் 5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Income Tax department has suggested assessees to opt for e-filing of their returns for a hassle-free processing of the annual returns filing exercise. The last date for filing ITRs is July 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X