For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்ட்ராய்ட் கோதாவில் இறங்குகிறது பிளிப்கார்ட்... சொந்தமாக ஸ்மார்ட்போன் வெளியிட பிளான்

பிளிப்கார்ட் நிறுவனம் சொந்தமாக ஆண்ட்ராய்ட் போனை வெளியிட முடிவு செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சொந்தமாக ஸ்மார்ட் போனை வெளியிட முடிவு செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படும் என பிளிப்கார்ட் கூறியிருக்கிறது.

இது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாக இருக்கும் ஆண்ட்ராய்ட் போன் ஆகும். இந்த போன் மிகவும் குறைந்த விலையில் அதிக பயன்பாடுகளுடன் இருக்கும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

இதற்காக இப்போதே அந்த நிறுவனம் நிறைய விளம்பரங்களை வெளியிட துவங்கி இருக்கிறது. இந்த போனின் வெளியிட்டு விழாவை மிகவும் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

 அமேசானை முந்தும் பிளிப்கார்ட்

அமேசானை முந்தும் பிளிப்கார்ட்

ஆன்லைன் வியாபர உலகில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். அமெரிக்க நிறுவனமான இதற்கு தற்போது கடும் போட்டியாக இருக்கிறது பெங்களூரை சேர்ந்த பிளிப்கார்ட் நிறுவனம். அமேசான் நிறுவனத்தை உலக அளவில் முந்துவதற்காக நிறைய முயற்சிகளை பிளிப்கார்ட் எடுத்து வருகிறது. சமயங்களில் சீனாவை சேர்ந்த 'அலி பே' நிறுவனமும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடம் பிடித்துவிடுகிறது.

 பிளிப்கார்ட்டின் ஸ்மார்ட் போன்

பிளிப்கார்ட்டின் ஸ்மார்ட் போன்

இந்த நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களையும் முந்துவதற்க்காக பிளிப்கார்ட் புதிய திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறது. அதன்படி பிளிப்கார்ட் புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட முடிவு செய்து இருக்கிறது. மேலும் இது பிளிப்கார்ட் இணையதளத்தை தவிர வேறு எந்த ஆன்லைன் தளத்திலும் கிடைக்காது. இந்த ஸ்மார்ட்போன் முழுக்கு முழுக்க இந்தியாவில் தயாரானது ஆகும். இதன் பல பாகங்கள் பெங்களூரில் தயாராகி இருக்கிறது.

 போன் எப்படி இருக்கும்

போன் எப்படி இருக்கும்

இந்த ஸ்மார்ட் போனின் விலை 10,990 ரூபாய் ஆகும். இது முழுக்க முழுக்க ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்பட கூடியது. 5.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போன 4ஜிபி ரேம் கொண்டது. மேலும் 64ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டது. இதன் கேமரா ஆப்பிள் போன்களின் கேமராவைவிட சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

 மாஸ் காட்ட காத்திருக்கும் விளம்பரங்கள்

மாஸ் காட்ட காத்திருக்கும் விளம்பரங்கள்

இந்த போன் வரும் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும். 12,999 ரூபாய் விலை கொண்ட இதன் இன்னொரு மாடல் போன் அறிமுகம் ஆக இன்னும் சில நாள் ஆகும். சாம்சங், மோட்டோ, எம்ஐ போன்களுக்கு இது போட்டியாக இருக்கும். இதை விளம்பரப்படுத்தும் விதமாக நிறைய டீ-ஷர்ட்டுகளும், எலெக்ட்ரானிக் பொருட்களும் இதன் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கின்றன. இதன் அறிமுக விழா பெரிய அளவில் நடக்கும்.

English summary
Flipkart has announced its first Android mobile phone market in India. This smart phone which priced at Rs 10,990 onwards will be available from November 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X