For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்... ஜிடிபி 7.9 சதவீதமாக உயர்வு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகின் வேகமான வளர்ச்சி என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியல் துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு வெளியிடுகிறது. அதன்படி 2015-16 நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 GDP growth at 7.6%; India now fastest-growing economy in the world

வேளாண் மற்றும் பிறதுறைகளின் உற்பத்தி அதிகரித்தன் காரணமாக, வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015-16ம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.5 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 7.6 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 7.2 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது. இதன்மூலம் 2016ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதன்படி 2015-16 நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது வேகமான வளர்ச்சி ஆகும்.

மதிப்பீட்டு காலத்தில், உள்கட்டமைப்பு, சேவைத்துறை மற்றும் உற்பத்திசார்ந்த வளர்ச்சி நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி உள்ளதாகவும், இதனால் ஜிடிபி வளர்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
India's economy expanded by 7.6 percent in the financial year 201-16,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X