For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 220% அதிகரிப்பு - தங்கக்கட்டிகள் இறக்குமதியும் உயர்ந்தது

ஏப்ரல் - ஜூலை இடையேயான 4 மாதங்களில் இந்தியாவின் தங்க நகைகள் ஏற்றுமதி 220 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக நகை மற்றும் ரத்தினங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் - ஜூலை மாதங்களுக்கான தங்கம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தங்க நகைகள் ஏற்றுமதி 220 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் தங்கக் கட்டிகளின் அளவும் 450 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தங்க நகை நுகர்வில் உலக அளவில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய பெண்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். எதிர்கால முதலீடாக பெண்கள் நினைப்பது தங்க நகைகளைத்தான். உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்துவருகிறது.

இந்தியர்கள் தங்கத்தை புனிதமான பொருளாக மதிப்பதுடன், நல்ல முதலீடாகவும் மக்கள் கருதுவதால்தான் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தேவை அதிகமாக உள்ளது.

தங்க நகைகள் ரூ.23,012.51 கோடி ஏற்றுமதி

தங்க நகைகள் ரூ.23,012.51 கோடி ஏற்றுமதி

நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலங்கள் வாயிலாக மொத்தம் ரூ.23,012.51 கோடி மதிப்பிலான தங்க நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

220 சதவிகிதம் அதிகம்

220 சதவிகிதம் அதிகம்

இது 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் ஏற்றுமதியான ரூ.7,175.54 கோடி மதிப்பிலான தங்க நகைகளை விட 220.7 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம் உள்நாட்டு சரக்குப் பகுதி வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு 7.36 சதவிகிதம் குறைந்து ரூ.5,863.67 ஆக மட்டுமே உள்ளது.

இறக்குமதி வரியால் குறைந்த ஏற்றுமதி

இறக்குமதி வரியால் குறைந்த ஏற்றுமதி

இந்தியாவிலிருந்து அதிகமான தங்க நகைகளை இறக்குமதி செய்யும் சந்தையாக துபாய் உள்ளது. இருப்பினும் அங்கு தங்கம் இறக்குமதிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்ட பிறகு அந்நாட்டின் இறக்குமதி சற்று குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா இறக்குமதி

இந்தியா இறக்குமதி

தங்கக் கட்டிகளின் இறக்குமதியைப் பொறுத்தவரையில், ஜூலை மாதத்தில் மட்டும் 450 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.5,246.54 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சென்ற ஆண்டின் ஜூலை மாதத்தில் இதன் மதிப்பு ரூ.954.07 கோடியாக மட்டுமே இருந்தது.

ஏப்ரல் - ஜூலை

ஏப்ரல் - ஜூலை

ஏப்ரல் - ஜூலை மாதங்களில் ரூ.21,169.04 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட ரூ.5,266.80 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை விட இது 302 சதவிகிதம் அதிகமாகும்.

English summary
gold jewellery exports from SEZ/EPZs have surged by 220 per cent between April and July, while that from DTA is down by 7 per cent. Import of gold bar too has recorded a huge leap of 450 per cent in July and 302 per cent between April and July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X