For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் விலை அதிரடி சரிவு... ஒரு சவரன் ரூ.18,904க்கு விற்பனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச சந்தையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு இன்று 176 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 18,904 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது.

திங்கட்கிழமையன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு 256 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 216க்கு விற்பனையானது. நேற்றும் சரிவை சந்தித்த தங்கம் இன்று அதிரடியாக விலை குறைந்ததால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அட்சய திரிதியை நாளை விட கடந்த இரு தினங்களாக நகைக்கடைகளில் கூட்டம் சும்மா அள்ளுகிறது காரணம் தங்கம் விலை குறைந்து விட்டதுதான்.

சரியும் தங்கம் விலை

சரியும் தங்கம் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. திங்கட்கிழமையன்று காலையில் ஆபரண தங்கத்தின் விலை திடீரென்று சரிவடையத் தொடங்கியது. 22 கேரட் தங்கத்தின் விலை, ஒரு கிராம் ரூ.2,387 ஆக இருந்தது. இது முந்தையநாள் விலையைவிட கிராமுக்கு ரூ.50 குறைவாகும். ஒரு பவுனுக்கு ரூ.376 குறைந்து ரூ.19,096க்கு விற்பனையானது. ஆனால், மாலையில் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

அதிரடி சரிவு

அதிரடி சரிவு

திங்கட்கிழமை சந்தை நேர முடிவின்போது சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.2,402-க்கும் ஒரு பவுன் ரூ.256 குறைந்து ரூ.19,216-க்கும் விற்பனையானது.

செவ்வாய்கிழமையன்றும் சரிவு

செவ்வாய்கிழமையன்றும் சரிவு

தங்கம் விலை இரண்டாவது நாளாக செவ்வாய் கிழமையன்றும் சரிவைச் சந்தித்தது. சென்னையில் நேற்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2385க்கும், ஒரு சவரன் ரூ.19,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.25510க்கு விற்பனையானது.

19ஆயிரத்திற்கும் கீழ் தங்கம்

19ஆயிரத்திற்கும் கீழ் தங்கம்

இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் ஒரு சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 18,904 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராமிற்கு 22 ரூபாய் குறைந்து ரூ.2363க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராமிற்கு 24 ரூபாய் குறைந்து ரூ.2527 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை சரிவு

வெள்ளி விலை சரிவு

வெள்ளி ஒரு கிராமிற்கு 20 காசுகள் குறைந்து 36.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு 240 ரூபாய் குறைந்து 33,790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நகை விற்பனையாளர்கள்

நகை விற்பனையாளர்கள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் இன்று 19ஆயிரத்திற்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் சரிந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.19,032க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் பவுன் விலை ரூ.18,904 என்ற அளவுக்கு பெரிய சரிவை கண்டுள்ளது என்கின்றனர் நகை விற்பனையாளர்கள்.

பொருளாதார வீழ்ச்சி

பொருளாதார வீழ்ச்சி

கிரீஸைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி நாட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து தங்கம் விலை அதிகரிக்கும். இதனால், தற்போது நகை வாங்க நல்ல நேரம் என்றும் கூறியுள்ளனர்.

உயரும் டாலர் மதிப்பு

உயரும் டாலர் மதிப்பு

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1130 டாலராக உள்ளது. இந்த விலையில் 2010ம் ஆண்டு வர்த்தகம் ஆனாது. 2013ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் ஃபெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அறிவிப்பது வெளியாகி உள்ளது. இது மட்டும் இல்லாமல் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதாலும் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது.

அலைமோதும் கூட்டம்

அலைமோதும் கூட்டம்

இந்த வீலை வீழ்ச்சி பொதுமக்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆவணி, புரட்டாசி மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவது வழக்கம். இதனால் தங்கம் விலை வீழ்ச்சியை பயன்படுத்தி இப்போதே பெற்றோர்கள் திருமணத்துக்கு நகைகளை வாங்கி வருகின்றனர்.

தரமான நகைகளா?

தரமான நகைகளா?

நீங்கள் வாங்கும் நகைகள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வாங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண் உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கே கிளம்பீட்டிங்க நகை வாங்கவா?

English summary
Gold prices plummeted by Rs 176 to trade at over two-year low of Rs 19,000 per 8 grams at the bullion market today, tracking a weak global trend amid slump in demand from jewellers and retailers. The US Federal Reserve plans to raise interest rates this year on the back of an improving American economy, and that is taking the shine off gold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X