For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் சுங்கவரி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களில் மத்திய அரசு அடிப்படை சுங்க வரிகளை உயர்த்தியுள்ளது.

[ போதையில் டார்ச்சர் செய்த தந்தை: தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற மகள்.. காரைக்குடியில் பயங்கரம்! ]

ஏ.சி.க்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 10 கிலோவுக்கு குறைவான வாஷிங் மெஷின்கள் ஆகிய பொருட்களின் இறக்குமதி வரி 20 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு 19 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது.

ஏசி பிரிட்ஜ் வரி உயர்வு

ஏசி பிரிட்ஜ் வரி உயர்வு

இதேபோன்று ஏ.சி.க்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் ஆகியவற்றுக்கான கம்பிரெசர்களின் விலை 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் அமல்

நள்ளிரவு முதல் அமல்

ஜெட் விமான எரிபொருளின் இறக்குமதி வரியும் உயர்ந்துள்ளது. இதனால் விமானத்தில் பறப்பது அதிக பொருட்செலவு கொண்ட ஒன்றாக இருக்கும். இந்த புதிய விலை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தங்க நகைகள்

தங்க நகைகள்

தங்க நகைகள் மீதான சுங்க வரி 15-ல் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேடியல் டயர் மீதான இறக்குமதி வரி 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சூட்கேஸ், ஸ்பீக்கர், செருப்பு

சூட்கேஸ், ஸ்பீக்கர், செருப்பு

இறக்குமதி செய்யப்படும் ஸ்பீக்கர், காலணிகள் மீதான வரி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ட்ரங்க் பெட்டி, சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களின் வரி 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் வீட்டு அலங்காரப் பொருட்கள் மீதான சுங்க வரியும் உயர்கிறது.

அத்தியாவசியமற்ற பொருட்கள்

அத்தியாவசியமற்ற பொருட்கள்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவாலும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

English summary
Govt has hicked import duty on 19 items including AC, Fridge, Washing machine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X