For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி... எந்த பொருட்களுக்கு வரிவிலக்கு...எத்தனை சதவிகித வரி ?

பால், தயிர், உணவுப் பொருட்கள், கல்வி, சுகாதாரத்துக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் பால், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த பொருட்களுக்கு எத்தனை சதவிகித வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்

1,211 பொருட்களுக்கு நேற்று முன்தினம் வரி நிர்ணய செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பால், பழங்கள், காய்கறிகள் பருப்பு, தானியங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஓட்டல், சினிமா, தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும். தங்கத்தின் மீதான வரி விதிப்பு முடிவு செய்யப்படவில்லை.

ஜிஎஸ்டி வரி விதிப்பு

ஜிஎஸ்டி வரி விதிப்பு

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்காக வரி விதிப்பு இருக்கும். இதில் எந்த சதவீதத்துக்குள் எந்த பொருள் அல்லது சேவையை கொண்டுவருவது என, இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வந்தது. இதில் 1,211 பொருட்களுக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

வரி விலக்கு

வரி விலக்கு

சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், தயிர், பழங்கள், காய்கறிகள், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மெட்ரோ, மின்சார ரயில் போன்ற உள்ளூர் ரயில் சேவைகள், ஹஜ் யாத்திரை போன்ற ஆன்மீக புனித பயணங்கள் ஆகியவற்றுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இறுதி செய்யப்பட்ட பொருட்கள்

இறுதி செய்யப்பட்ட பொருட்கள்

நேற்றைய கூட்டத்தில் தொலைத்தொடர்பு, விமான பயணம், காப்பீடு, ஓட்டல், ரெஸ்டாரன்ட் சேவை வரிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி, வரிகள் இறுதி செய்யப்பட்டன. இதில் விதிக்கப்பட்ட வரிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

5 சதவிகித வரி

5 சதவிகித வரி

போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஓலா, உபர் போன்ற டாக்சி சேவைகளுக்கு தற்போது 6 சதவீத வரி உள்ளது. இது 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஏசி அல்லாத ரயில் டிக்கெட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏசி டிக்கெட்கள் மீது 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும். ரூ.50 லட்சம் அல்லது அதற்கு கீழ் ஆண்டு வர்த்தகம் மேற்கொள்ளும் ரெஸ்டாரன்ட்களுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்படும்.

ரெஸ்டாரென்ட்கள்

ரெஸ்டாரென்ட்கள்

ஏசி அல்லாத ரெஸ்டாரன்ட்களுக்கு 12 சதவீத வரி விதிப்பு உண்டு. ஆனால், மதுபான லைசென்ஸ் பெற்றுள்ள ஏசி ரெஸ்டாரன்ட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். எகனாமிக் வகுப்பு விமான பயணத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுக்கு 12 சதவீத வரி வசூலிக்கப்படும். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கும் தொகையில் 1 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.

18 சதவிகித வரி

18 சதவிகித வரி

ரூ.1,000க்கு கீழ் உள்ள வாடகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2,500 முதல் ரூ.5,000க்கு கீழ் அறை வாடகை கொண்ட ரெஸ்டாரன்ட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, மிக சாதாரண விடுதி அறை கட்டணங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

தற்போது தொலைத்தொடர்பு துறையில் சேவை வரி 15 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் 18 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளதால் கட்டணங்கள் உயரும்.

28 சதவிகித வரி

28 சதவிகித வரி

பைவ் ஸ்டார் ஹோட்டல் அறை வாடகை ரூ.5,000க்கு மேல் இருந்தால் அவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும். இதுபோல் சூதாட்டம், குதிரை பந்தயம், சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்படும். சினிமா தியேட்டர்கள், தீம் பார்க் ஆகிய பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கு உச்சபட்ட வரியான 28 சதவீதம் விதிக்கப்படுவதால் அவற்றின் விலை உயரும். ஆனால், சில மாநிலங்களில் இவற்றுக்கு விதிக்கப்படும் வரியை விட தற்போது அதிகமாக உள்ளது. எனவே அந்த மாநிலங்களில் சினிமா டிக்கெட் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் எவ்வளவு வரி விதிக்கின்றன என்பதை பொறுத்து கட்டணங்களில் மாற்றங்கள் இருக்கும்.

தங்கத்திற்கு வரி எவ்வளவு?

தங்கத்திற்கு வரி எவ்வளவு?

தங்கத்திற்கான வரி விகிதம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் அடுத்து ஜூன் 3ஆம் தேதி கூடும் கூட்டத்தில் வெளியிடப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார். ஜிஎஸ்டி முறையானது வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும், நாட்டின் ஜிடிபி 2 சதவீதம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Animal slaughtering and services provided by veterinary clinics will be exempt from GST while visits to theme parks and sporting events like IPL will attract a levy of 28 per cent under the new indirect tax regime kicking in from July 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X