For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா?

ஜிஎஸ்டியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,200 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ள புதிய சலுகையினால் லட்சக்கனக்கான நிறுவனங்கள் பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த வரிச்சலுகை அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

GST exemptions:The government may lose about Rs 5,200 crore

கடந்த ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரப்படி 87 லட்சம் பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 45 லட்சம் பேரின் ஆண்டு வர்த்தகம் 20 லட்சத்துக்கு கீழ் உள்ளது. 10 லட்சம் பேர் வர்த்தகம் 40 லட்சம் வரை உள்ளது. தற்போது ஜிஎஸ்டியில் சுமார் 1.2 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளவர்களில் 60 சதவீதம் பேர் கணக்கு தாக்கல் செய்யவோ, வரி செலுத்தவோ தேவையில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ள புதிய சலுகைகள் மூலம் குறைந்தபட்சம் 50 லட்சம் நிறுவனங்கள் பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் தொழில் துறையினர் கோரிக்கைக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வரி விலக்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி குழு இதுகுறித்து முடிவு செய்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் வரிச்சலுகை அறிவிப்பினால் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,000 கோடி கூடுதல் இழப்பு அரசுக்கு ஏற்படும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
The government may lose about Rs 5,200 crore annually following the GST Council's decision to double the exemption limit for payment of goods and services tax to Rs 40 lakh by micro, small and medium enterprises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X