For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன் தாக்கல் 2 நாட்கள் கூடுதல் அவகாசம்

ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் சில தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கோடைக்கால விற்பனை ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை இரண்டு நாள்கள் நீட்டித்து மே 22ஆம் தேதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் சில தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில், 'தொழில்நுட்ப சிக்கல்களைச் சீர்செய்வதற்காக, அமைப்பில் அவசரமாகப் பழுதுபார்த்தல் பணி நடந்து வருகிறது.

GST filing April return in Form GSTR-3B on 22 May

எனவே, வரி செலுத்துவோரின் விருப்பத்துக்கேற்ப ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை இரண்டு நாள்கள் நீட்டித்து மே 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து ஐம்பது சதவிகித்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தாங்களாகவே மாதந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி ஆகியவற்றை முறையே ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2, மற்றும் ஜிஎஸ்டிஆர் 3பி ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அனேக வர்த்தகர்களும் தொழில் துறையினரும், ஒருவித நிர்பந்தத்தின் காரணமாகவே அவசர கோலத்தில் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-2பி படிவங்களை இணையதளத்தில் தாக்கல் செய்துவருகின்றனர்.

இன்னும் சில வர்த்தகர்களும், வர்த்தகத்துடன் சேவைத் துறைகளையும் மேற்கொள்ளும் சில தொழில்துறையினரும் இன்றுவரையில் ஜூலை முதல் ஜனவரி வரையில் மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களையும் நிகர வரியையும் தாக்கல் செய்யாமலேயே காலாம் கடத்தி வருகின்றனர்.

இதனால், பொருட்களை விற்பனை செய்தவர்கள் உள்ளீட்டு வரியை பயன்படுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த 1.03 லட்சம் கோடி ரூபாய் என்பது மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசுகளின் ஜிஎஸ்டியை மொத்தமாகப் பிரதிபலிக்கிறது. ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி மே மாதத்தில் வசூலிக்கப்படும். மே மாதத்தில் வசூலிக்கப்படும் ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரியின் மதிப்பு ஜூன் 1ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.

English summary
The Finance Ministry has extended the last date for filing GST returns in form GSTR-3B for the month of April 2018 by two days to 22 May to give more time to taxpayers facing technical issues with the filing system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X