For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம் - உலக வங்கி தகவல்

இந்தியாதான் ஜிஎஸ்டி வரியை அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம்- வீடியோ

    டெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.

    நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மோசமான நிதி நிலைமை போன்றவற்றிற்கு ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் விருப்பம் போல வரிவிதிப்பு முறையை செயல்படுத்துவதுதான் காரணம், மற்ற நாடுகளைப் பாருங்கள், அந்த நாடுகள் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை செயல்படுத்துவதால்தான் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன என்று சப்பைக் கட்டு காரணத்தை சொல்லி வந்தனர்.

    அதற்கு ஒரே தீர்வு என்பது வாட் வரிவிதிப்பு முறையை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை செயல்படுத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் விலைவாசி குறையும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

    சரக்கு மற்றும் சேவை வரி

    சரக்கு மற்றும் சேவை வரி

    ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒரே நாடு ஒரே வரிவிதிப்பு முறை என்ற முறையில் வரி விகித 15 சதவிகிமாகவோ அல்லது 18 சதவிகிமாகவோதான் இருக்கும் என்றும் அனைத்து விதிமான பொருட்களும், சேவைத் துறைகளும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படும் சத்தியம் செய்யாத குறையாக நம்மை நம்ப வைத்தனர்.

    பல அடுக்கு வரி

    பல அடுக்கு வரி

    நாமும் நம் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்தால்தான் நாமும் வளர்ச்சியடைவோம், நம்முடைய வாழ்க்கைத்தரமும் உயரும், விலைவாசி குறையும் என்ற நம்பிக்கையில், சரி என்று நம்பிக்கையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு தலையசைத்தோம். ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்போது வரிவிகித கட்டமைப்பானது 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என ஐந்து கட்டமைப்பாக அமல்படுத்தப்பட்டது.

    வரி விலக்கு

    வரி விலக்கு

    இதில், தங்க நகைகளுக்கு மட்டும் விதிவிலக்காக 3 சதவிகிதமும், விலைமதிப்பற்ற கற்களுக்கு 0.25 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அதுபோலவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், ஏற்றுமதிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல்

    பெட்ரோல், டீசல்

    ஆனால், அதே சமயத்தில் சமயோசிதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டித்தரும் மதுபானம், பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட், ஆயத்தீர்வை மற்றும் மின்சாரம் போன்றவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார்கள்.

    தொழில் துறையினர் கோரிக்கை

    தொழில் துறையினர் கோரிக்கை

    பெட்ரோலியப் பொருட்கள், மதுபானம் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிவரம்பிற்குள் கொண்டுவந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதால், இவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்று வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

    தட்டி கழித்த நிதியமைச்சர்

    தட்டி கழித்த நிதியமைச்சர்

    நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், உட்சபட்ச வரியான 28 சதவிகிதத்தை குறைக்கவும், 12 சதவிகிதத்தையும் 28 சதவிகிதத்தையும் ஒன்றிணைக்கவும் கூடிய விரையில் ஆவண செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்தவுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்து வருகிறார்.

    இந்தியாவில் அதிகம்

    இந்தியாவில் அதிகம்

    நம் நாட்டில் தான் ஜிஎஸ்டி வரிவிகிதம் அதிகம் என்று அனைத்து தரப்பினரும் ஆதங்கப்படுகின்றனர். நம்முடைய ஆதங்கத்திற்கு வலு சேர்ப்பதுபோல, தற்போது உலக வங்கியும், இந்தியாவில் தான் ஜிஎஸ்டி வரிகள் அதிகமாக உள்ளது என்று தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

    உலக வங்கி அறிக்கை

    உலக வங்கி அறிக்கை

    உலக வங்கி, ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் தன்னுடைய ஆண்டறிக்கையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைப் பற்றி குறிப்பிடும்போது, தற்போது உலக நாடுகளில் 115 நாடுகள் ஜிஎஸ்டி விரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் 49 நாடுகள் ஒற்றை வரிவிதிப்பு முறையை கையாண்டுவருகின்றன. 28 நாடுகள் இரட்டை வரி கட்டமைப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன.

    இந்தியா - பாகிஸ்தான்

    இந்தியா - பாகிஸ்தான்

    இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி, லக்க்ஷம்பர்க் மற்றும் கானா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் பூஜ்யம் இல்லா (nil rate)வரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. மேலும் இந்த நாடுகளில் மட்டுமே நான்கு முதல் ஐந்து விதிமான வரிகட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கட்டமைப்பில் எந்தவிதமான சிக்கல்களும் எழுவதில்லை.

    தமிழகத்தில் வரி

    தமிழகத்தில் வரி

    இந்தியாவில்தான் உட்சபட்ச வரி விதியும் (28%), அதிக பட்ச வரிவிதிப்பு கட்டமைப்பும் (0, 5%, 12%, 18% & 28%) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் அரசு தரப்பில் சில நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அதுவும் தமிழ்நாட்டில் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியுடன், பொழுதுபோக்கு வரியையும் செலுத்தவேண்டி இருந்தது.

    இந்தியாவிற்கு 2வது இடம்

    இந்தியாவிற்கு 2வது இடம்

    மகாராஷ்டிராவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பை சரிக் கட்டுவதற்காக மோட்டார் வரியை உயர்த்தி உள்ளது. இந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால், உலகில் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பை அமல்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

    English summary
    Goods and service tax is the most complicated with the 2nd highest tax slab in the world among 115 countries and India has the highest number of different GST slabs in the world. The World Bank said in a biannual report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X