For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜி.எஸ்.டி வரி : தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் இல்லை! ஆனால் வட்டி உண்டு

ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி ரிட்டன்களைத் தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ஜி.எஸ்.டியின் முதல் ரிட்டன்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டாவது ரிட்டன்கள் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பான ஜிஎஸ்டி கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல ஜிஎஸ்டிஎன் அமல்படுத்தப்பட்ட புதிதில் சற்று குழப்பமாக இருந்தாலும், அனைவரும் விரைவில் புரிந்துகொண்டு தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக்கொண்டனர்.

அதுபோலவே, மத்திய அரசும் வர்த்தகர்களின் சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு(Input Tax Credit) மற்றும் நிகர வரி போன்றவற்றை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு செப்டம்பர் 20ம் தேதிவரை கால அவகாசம் அளித்துள்ளது.

 ஜூலை மாத வரி

ஜூலை மாத வரி

ஜூலை மாதத்திற்கான செலுத்தவேண்டிய நிகர வரியை (Net Tax Liability) ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் புதிய படிவத்தின் மூலமாக ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆகும். ஆன்லைன் மூலம் வரி செலுத்தப்பட்ட பிறகுதான் ஜிஎஸ்டி வரி செலுத்தும் வேலை நிறைவடைகிறது.

ரூ.92000 கோடி வசூல்

ரூ.92000 கோடி வசூல்

இதனை பயன்படுத்தி பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் ஜூலை மாதத்திற்கான வரியை செலுத்தத் தொடங்கினர். இது வரையிலும் சுமார் 92000 கோடி ரூபாய் வரை வசூலானதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

வரி செலுத்திய தொழில் துறையினர்

வரி செலுத்திய தொழில் துறையினர்

இந்த வரி வசூலானது ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்த மொத்த வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரில் சுமார் 64.42 சதவிகிதமாகும். இதுவரையிலும் சுமார் 59.57 லட்சம் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சுமார் 38.38 லட்சம் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் ஜூலை மாதத்திற்கான வரியாக சுமார் 64.42 சதவிகிமான 92,283 கோடி ரூபாயை செலுத்தி உள்ளனர்.

அபராதம் தள்ளுபடி

அபராதம் தள்ளுபடி

ஜூலை மாதத்துக்கான வரி ரிட்டன்களை தாமதமாகத் தாக்கல் செய்வோருக்கான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தாமதமாக செலுத்தப்படும் வரிக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல்

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல்

ஜிஎஸ்டியின் முதல் ரிட்டன்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டாவது ரிட்டன்கள் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். மூன்றாவது ரிட்டன்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அபராதம் இல்லை... வட்டி உண்டு

அபராதம் இல்லை... வட்டி உண்டு

ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களில் பிழை செய்தவர்கள், ஜிஎஸ்டிஆர் -1, ஜிஎஸ்டிஆர் -2, ஜிஎஸ்டிஆர் -3, ஆகிய ரிட்டன்களில் சரியான தகவல்களை அளிக்க முடியும். எனினும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வரி குறித்த தகவல்களை அளிக்காதவர்களுக்கு வட்டி வசூலிக்கப்படும்.

English summary
The government has waived late payment fees for delayed filing of GST returns and allowed businesses to correct errors in the initial form while submitting final returns by September 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X