For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் வரும் பின்னே... ஜிஎஸ்டி வரி குறைப்பு முன்னே - ஜன.1 முதல் விலை குறையும் பொருட்கள்

ஆறு பொருட்கள் அதிகபட்ச வரி பிரிவான 28 சதவிகிதத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். சினிமா டிக்கெட் உள்ளிட்ட 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெர

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் வரும் பின்னே, வரி குறைப்பு முன்னே - ஜன.1 முதல் விலை குறையும் பொருட்கள்

    டெல்லி: லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஏசி, டிவி, சினிமா டிக்கெட் உள்பட 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவிகித வரிவிகிதத்தின் கீழ் இருந்த நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த கவுன்சில் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான பொருட்களின் வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த சில தினங்களுக்கு மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 99 சதவிகித பொருட்கள் 18 சதவிகித வரி விகிதத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாகவும், ஜிஎஸ்டி எளிமையாக்கப்பட உள்ளதாகவும் கூறியிருந்தார். அதே போல ஆடம்பர பொருட்கள் மட்டுமே 28 சதவிகித வரிவிகிதத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று 31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், 5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, டிவி, டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறைய உள்ளதாக கூறினார்.

    18 சதவிகித ஜிஎஸ்டி வரி

    18 சதவிகித ஜிஎஸ்டி வரி

    100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி விதிதம் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டதுள்ளது. அதேபோல், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி விதிகம் 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. வீடியோ கேம்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.

    விமான டிக்கெட் 5 சதவிகித ஜிஎஸ்டி

    விமான டிக்கெட் 5 சதவிகித ஜிஎஸ்டி

    எக்கனாமிக் கிளாஸ் விமான டிக்கெட் விலை மீதான ஜிஎஸ்டி வரி என்பது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரைக்கு செல்வோர் எந்த கிளாஸ் டிக்கெட்டில் பயணித்தாலும் ஒரே மாதிரி வரி செலுத்தினால் போதும்.

    28 சதவிகித ஜிஎஸ்டி வரி

    28 சதவிகித ஜிஎஸ்டி வரி

    ஆடம்பர பொருட்கள், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 22 பொருட்கள் மட்டும் 28 சதவிகித வரி வரம்புக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதில், 13 ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், சிமென்ட் ஆகியவை அடங்கும்.

    ஜனவரி 1,2019 முதல் அமல்

    ஜனவரி 1,2019 முதல் அமல்

    இவற்றை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இந்த புதிய வரிவிதிப்பு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார் அருண் ஜெட்லி. தமிழகம் கேட்டுக்கொண்ட 23 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தல் 2019

    லோக்சபா தேர்தல் 2019

    மோடி அரசு பதவியேற்ற பின்னர் பல மாநில தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக பலத்த அடி வாங்கியது. லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் தேர்தலில் வென்றாக வேண்டிய முனைப்புடன் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக ஜிஎஸ்டி வரியை குறைத்து மக்களை கூல் செய்யலாம் என்று நினைக்கிறது பாஜக அரசு. இந்த வரி குறைப்பு மக்களிடம் எடுபடுமா என்பது மே மாதம் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் தெரிந்து விடும்.

    English summary
    Finance Minister Arun Jaitley on Saturday said that six items have been removed from the 28 per cent tax bracket under the Goods and Services Tax regime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X