For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி அடுத்த அதிரடி - மாதச் சம்பளதாரர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கப்போகிறதா?

நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கும் கேன்டீன் செலவுகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. கேன்டீன் செலவுகளுக்கு கட்டணம் வசூலித்தால் அதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டியது கட்டாயம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜிஎஸ்டி அடுத்த அதிரடி- வீடியோ

    டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கூடுதல் சுமையை குறைப்பதற்காக மிகப்பெரும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சில்லறை செலவினங்களுக்கு வரி விதிக்கும் விதமாக சம்பளத் தொகுப்பில் மாற்றங்கள் செய்யக்கூடும் என்று தெரிகிறது.

    பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தங்கள் நிறுவன ஊழியர்களின் வசதிக்காக சிற்றுண்டி முதல் அனைத்து உணவு வகைகளையும் இலவசமாகவும் சலுகை விலையிலும் அளிப்பதுண்டு.

    அதேபோல். உடற்பயிற்சிக் கூடம், மற்றும் பிற வசதிகளையும் அமைத்துக் கொடுப்பதுண்டு. நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு இதுவும் ஒரு உத்தியாகும்.

    மாத சம்பளதாரர்கள்

    மாத சம்பளதாரர்கள்

    ஊழியர்களுக்கு மருத்துவ வசதி, வாடகை வசதி, போக்குவரத்து வசதி, குறிப்பிட்ட உச்ச வரம்புக்கும் மேற்பட்ட தொலைபேசி கட்டணத்திற்கு சலுகை, கூடுதல் தொகைக்கான மருத்துவக் காப்பீட்டு, ஊழியர்களின் சீருடை, அடையாள அட்டை போன்றவற்றிற்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டணத்தை திரும்ப செலுத்துவதுண்டு. ஊழியர்களுக்கு அளிக்கும் இந்த சலுகைகளுக்கு எல்லாம் அவர்களின் சம்பளத்தில் இருந்த எந்தவிதமான பிடித்தமும் (Deduction) செய்வது கிடையாது.

    ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம்

    ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம்

    தொழிற்சாலைச் சட்டம் 1948ன் படி ஊழியர்களுக்கு வழங்கும் சிற்றுண்டி, தேநீர் போன்றவற்றிற்கு, அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது கூடாது. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சட்டம் 2017, பிரிவு 2(83)ன் படி நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும் சேவையாக கருதப்படுவதால், சிற்றுண்டிச் செலவுகளுக்கு நிறுவனம் வரி செலுத்தவேண்டியது கட்டாயமாகும். ஒரு வேளை ஊழியர்களிடம் இருந்த சிற்றுண்டி செலவுகளுக்கு கட்டணம் ஏதேனும் வசூலித்தால், நிறுவனம் கூடுதலாக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

    ஜிஎஸ்டி வரி

    ஜிஎஸ்டி வரி

    வரித் திட்ட வல்லுநர்கள் (Authority for Advance Rulings-AAR) இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார்கள். நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கும் கேன்டீன் செலவுகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. கேன்டீன் செலவுகளுக்கு கட்டணம் வசூலித்தால் அதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டியது கட்டாயம் என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

    சிற்றுண்டிக் கட்டணம்

    சிற்றுண்டிக் கட்டணம்

    நிறுவனங்களின் வரி ஆலோசகர்களும் இது தொடர்பாக அந்நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு உயர் அதிகாரிகளை அழைத்து, ஊழியர்களிடம் இருந்து சிற்றுண்டிக் கட்டணம் மற்றும், வேறு ஏதேனும் கட்டணம் திரும்ப வசூலிக்கப்பட்டதா என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அப்படி கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால், அதற்கான முறையான பில் அல்லது ரசீது அவை முறையாக பராமரிக்கப்பட் வேண்டியது கட்டாயமாகும்.

    தருபவர் பெறுபவர் உறவு

    தருபவர் பெறுபவர் உறவு

    நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் தொழிலாளர், தொழிலாளி என்ற அடிப்படையில் உறவு இருந்தாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பொருத்த வரையிலும் சேவையை அளிப்பவர், சேவையை பெறுபவர் என்ற உறவு நிலை உள்ளதால், நிறுவனங்கள் சிற்றுண்டி சேவைக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது கட்டாயமாகும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சலுகை விலையில் சிற்றுண்டி வசதி அளித்தாலும் ஜிஎஸ்டி விதிகளின்படி, வெளியிடங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு ஏற்பவே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று வரி ஆலோசர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

    சம்பளத்தில் பிடித்தம்

    சம்பளத்தில் பிடித்தம்

    நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் வரிச் சுமையைக் குறைக்க நினைத்தால், அவர்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய நினைப்பதுண்டு. அதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் துண்டு விழும் நிலை ஏற்படும்.

    English summary
    The new GST regime may prompt Indian companies to restructuring compensation packages or HR benefits of their employees to ensure that they do not taxing times under the GST.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X