For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு விவரங்களை கண்டுபிடிக்க சாப்ட்வேர் : ஜிஎஸ்டிஎன் தகவல்

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு விவரங்களை கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கப்படும் என ஜிஎஸ்டிஎன் நிறுவனம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு விவரங்களை கண்டுபிடிக்க சாப்ட்வேர்- வீடியோ

    டெல்லி: ஒவ்வொரு மாதமும் வரித் தாக்கல் செய்ய அனுமதிப்பது மற்றும் வரி வசூல் செய்யும் நடைமுறையை ஜிஎஸ்டிஎன் கடந்த 11 மாதங்களாக செய்து வருகிறது. இந்த நிலையில் வரி ஆவணங்களை ஆராய தொழில்நுட்பத்தினை கொண்டுவர உள்ளது.

    ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், வர்த்தகர்களும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை முழுமையாக புரிந்துகொள்ளாமலேயே போட்டி போட்டுக்கொண்டு தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் தாக்கல் செய்தனர்.

    GSTN tools to beat tax evasion?

    ஜிஎஸ்டியில் முறையாக பதிவு செய்தவர்களில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரிமுறைகளைப் பற்றி புரியாமல் ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்ததால் ஜிஎஸ்டி வரி வருவாயும் அதிகரித்தது. ஜிஎஸ்டி தாக்கல் நடைமுறைக்கு வந்த பின்னர் ஜிஎஸ்டிஎன் நிறுவனம் 11.5 கோடி வரித் தாக்கல் கணக்குகளை கையாண்டுள்ளது. 1.11 கோடி வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வரி ஆவணங்களை ஆராய தொழில்நுட்பத்தினை கொண்டுவர உள்ளது. அநேகமாக இந்த ஆண்டு வரித் தாக்கல் நடைமுறைகளில் இருந்து இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று ஜிஎஸ்டிஎன் ஆணையத்தின் உயர்அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும் வரி தாக்கல் செய்பவர்கள் அளித்துள்ள விவரங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடிக்க வரித் துறை அதிகாரிகளுக்கு இந்த சாப்ட்வேர் உதவும். இதற்கான கருவிகளை ஜிஎஸ்டிஎன் நிறுவனம் உருவாக்கி வருகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ஜிஎஸ்டிஎன் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் குமார் கூறுகையில், நிறுவனம் அடுத்த கட்டமாக தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கான முனைப்புகளில் உள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டிஎன் தளத்தில் பயனர்களுக்கு எளிதான சேவை கிடைக்கும். தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வரித் தாக்கல், தணிக்கை, மேல்முறையீடுகள் போன்றவை மேம்படும் என்றார்.

    தற்போது தகவல் பகுப்பாய்வு செய்யும் வரி அதிகாரிகளுக்கான உதவிகளை மட்டும் அளிக்கிறோம். விரைவில் இதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை அளிக்க உள்ளோம். அடுத்த சில மாதங்களில் இதற்கான மென்பொருட்களை கொண்டுவந்து விடுவோம். என்றார்

    English summary
    Almost a year into providing platform for tax collection, GST Network (GSTN) is developing applications and tools for tax officers to help analyse data of their assessees and check possible evasion, a senior official said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X