For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இ வே பில் குஜராத் டாப் - 1 கோடி பில் போட்டு சாதனை

இ-வே பில் அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரையிலும் இ-வே பில் வசூலில் குஜராத் மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது.

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இ-வே பில் வசூலில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரையிலும் முடிந்த காலகட்டத்தில் இ-வே பில் முறையில் சரக்குகளை விற்பனை செய்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 49 லட்சம் இ-வே பில்களும், மே மாதத்தில் சுமார் 52 லட்சம் இ-வே பில்களும், நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் சுமார் 573453 இ-வே பில்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், சரக்குகளை மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்வதற்கு முதுகெலும்பாக உள்ள இ-வே பில் நடைமுறை இல்லாததால் வர்த்தக நிறுவனங்கள் குழப்பம் அடைந்தன. இதனால் ஒவ்வொரு மாதமும் விற்பனை சரிவடைந்து மத்திய, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வருவாயும் சரிவடைந்தது.

Gujarat tops e-way bill collection since April

ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்ததை உணர்ந்த ஜிஎஸ்டி ஆணையமும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் இ-வே பில் முறையை சோதனை ஓட்டமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது. கூடவே ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும், ஜூன் மாதம் முதல் மாநிலத்திற்குள் (Intrastate) சரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் முறை அமல்படுத்தப்படும் என்றம் அறிவித்தது.

ஒரே மாநிலத்துக்குள் பொருட்களை எடுத்துசெல்லும்போதும் இ-வே பில்களை உருவாக்கவேண்டும் என்னும் நடைமுறை உத்திரப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து தொழில் துறையினரும் வர்த்தக நிறுவனங்களும் மாநிலங்களுக்கு இடையில் 50000 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புடைய சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் முறையை முறையாக பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் இ-வே பில் முறையை பயன்படுத்தி சுமார் 19 வகையான பொருட்களை மாநிலத்திற்கு உள்ளும், பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யத் தொடங்கினர்.

இ-வே பில் அமல்படுத்தப்பட்ட புதிதில், இ-வே பில் இணையதளத்தில் சிற்சில தொழில்நுட்பக் கோளாறுகளும், இடைஞ்சல்கள் இருந்தாலும், பின்னல் அவை படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டதால், தொழில் துறையினரும் வர்த்தகர்களும் இ-வே பில் ஆவணங்களை பயன்படுத்தி சரக்குகளை கொண்டு சென்றதால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விற்பனை வேகமெடுத்தது. இதன் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரி வசூலும் உயரத் தொடங்கியது.

இ-வே பில் முறையைப் பயன்படுத்தி சரக்குகளை மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்கு உள்ளும், சரக்குகளை பரிமாற்றம் செய்து விற்பனை செய்வதில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இ-வே பில் பயன்பாட்டை பொருத்தவரையில். தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள கர்நாடக மாநிலம் பின்தங்கிவிட்டது எனலாம். ஏனெனில் இ-வே பில் முறைக்கு முன்னோடியாக இ-சுகம் என்னும் ஆவணத்தை முதன்முதலில் கர்நாடக மாநிலம்தான் உள்ளூர் சரக்கு பரிமாற்றத்திற்கு பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரையிலும் முடிந்த காலகட்டத்தில் இ-வே பில் முறையில் சரக்குகளை விற்பனை செய்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சுமார் 49 லட்சம் இ-வே பில்களும், மே மாதத்தில் சுமார் 52 லட்சம் இ-வே பில்களும், நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் சுமார் 573453 இ-வே பில்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலம் 81 லட்சம் இ-வே பில்களை பயன்படுத்தி இரண்டாம் இடத்திலும், கர்நாடக மாநிலம் சமார் 76 லட்சம் இ-வே பில்களை பயன்படுத்தி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இது பற்றி விளக்கமளித்த குஜராத் மாநில வணிகவரித் துறையின் இணைச் செயலாளர் ஆர் ஆர் பாட்டீல், குஜராத் மாநிலத்தின் முதுகெலும்பே தொழில் துறையும் உற்பத்தித் துறையும் தான். அதுவும், சிமெண்ட் உற்பத்தி, விவசாயத்திற்கு தேவைப்படும் உர உற்பத்தி மற்றும் ரசாயன உர உற்பத்தி, பருத்தி மற்றும் நூல் உற்பத்தி மற்றும் புகையிலை ஆகியவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து, மாநிலத்திற்கு உள்ளும் பிற மாநிலங்களுக்கும் அனுப்புவதற்கு இ-வே பில் முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே குஜராத் மாநிலம் இ-வே பில் ஆவணங்களைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்றார்.

இ-வே பில் முறை முறையாக பயன்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்காக குஜராத் மாநிலம் முழுவதும் 23 கண்காணிப்பு படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் முறைகேடு நடப்பது தடுக்கப்படும் என்றம் அவர் தெரிவித்தார். ஜவுளித் துறையும், செராமிக் துறையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சற்று பின்தங்கி உள்ளன. அவை மீண்டு எழுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றன. அதே சமயத்தில் துணிகள் உற்பத்தித் துறையானது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சற்று வளர்ச்சி கண்டுள்ளது என்றும் ஆர் ஆர் பாட்டில் நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
Gujarat has emerged as the leading state in generating e-way bills during April, May and the first week of June. The state has generated over 10.72 million inter- and intra-state e-way bills, followed by Maharashtra (8.13 million), Karnataka (8.05 million), Uttar Pradesh (7.64 million) and Haryana (7.63 million), respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X