For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தனியார் துறை வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.20 சதவிகிம் வரையிலும் தடாலடியாக உயர்த்தி உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.20 சதவிகிம் வரையிலும் தடாலடியாக உயர்த்தி உள்ளது வீட்டுக்கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துளளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி எச்டிஎப்சி வங்கியாகும். இதன் துணை நிறுவனமான எச்டிஎப்சி வீட்டு வசதி நிறுவனம், வீட்டுக்கடன் (Housing Loan) மற்றும் அடமானக் கடன் (Mortgage Loan) வழங்கும் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது வரையிலும் சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

HDFC hike Benchmark PLR upto 0.20 percentage

எச்டிஎப்சி நிறுவனம், தற்போது வீட்டுக்கடன் மற்றும் அடமானக் கடனுக்கான அடிப்படை வட்டி (Prime Lending Rate-PLR) விகிதத்தை தடாலடியாக 0.20 சதவிகிதம் உயர்த்தி வீட்டுக்கடன் மற்றும் அடமானக் கடன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது சுமார் 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன் மற்றும் அடமானக் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தில் (PLR) இருந்து 0.20 சதவிகித்தை உயர்த்தி உள்ளது.

30 லட்சத்திற்கும் குறைவான தொகை உள்ள வீட்டுக்கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இந்த அடிப்படை வட்டி விகித உயர்வினால் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலும் உள்ள வீட்டுககடனுக்கான வட்டி விதமானது தற்போது உள்ள 8.40 சதவிகிதத்தில் இருந்து 8.60 சதவிகிமாக உயரும்.

75 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைக்கான வீட்டுக்கடன் வட்டி விகிமானது, தற்போது உள்ள 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.70 சதவிகிமாக உயரக்கூடும். அதே சமயத்தில் 30 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிமானது 8.40 சதவிகிதத்தில் இருந்து 8.45 சதவிகிமாக உயரக்கூடும்.

ஏற்கனவே, எச்டிஎப்சி வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களை கசக்கி பிழிந்து வருவதாக அதிருப்தி எழுந்துள்ளது. தற்போது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி தன்னுடைய வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

வட்டி விகிதத்தை உயர்த்தியது பற்றி விளக்கமளித்த எச்டிஎப்சி நிறுவனத்தின் துணைத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மிஸ்திரி, அரசு பத்திரங்களின் மீதான வருவாய் உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக 10 வருட கால கடன் பத்திரங்களின் மீதான வருவாய் (10 year Bond yield) கடந்த ஆண்டு ஜூலை முதல் தற்போது வரையிலும் சுமார் 1 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

கடன் பத்திர வருவாய் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சற்று குறைந்த போதிலும், வரும் காலங்களில் இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருவாய் உயர்வைக் கொண்டு எங்களின் கடன் வழங்கும் வரம்பில் சுமார் 2.20 சதவிகிதம் முதல் 2.35 சதவிகிதம் வரையிலும் சமாளித்துக்கொள்ள உதவும், என்று தெரிவித்தார்.

எச்டிஎப்சியின் பென்ச்மார்க் குறியீடான பிஎல்ஆர்(PLR) கடந்த 2013ம் ஆண்டு டிசம்பரில் 16.75 சதவிகிதத்தில் இருந்து 16.15 சதவிகிதமாக குறைந்து தற்போது உயர்ந்து வருகிறது. இது மேலும் உயர்ந்து 16.35 சதவிகிதத்தை எட்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதன்மூலம் எங்களின் கடன் வழங்கும் தகுதியை அதிகரித்துக்கொள்ள உதவும் என்றும் மிஸ்திரி தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆக்ஸிஸ் வங்கி கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை (MLCR). உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி ஆகியவையும் உயர்த்தின. தற்போது தனியார் துறை வீட்டு வசதி நிறுவனமான எச்டிஎப்சியும் வீட்டுக்கடனக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

எச்டிஎப்சி நிறுவனம் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தினாலும், பெண்கள் வாங்கி உள்ள வீட்டுக்கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தில் 0.05 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India’s largest mortgage financier HDFC, has hiked its benchmark prime lending rate (PLR) upto 0.20% . It is the first time since December 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X