For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் தவிர பிற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ தெரியுமா?

தமிழகத்தோடு ஒப்பிடும் போது பிற தென் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை கூடுதலாகவே உள்ளது. வாட் வரி அதிகரிப்பால் பிற மாநிலங்களில் மேலும் விலை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

By Super Admin
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் வாட் வரி குறைவாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலைகளும் தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவே தெரிவிக்கின்றனர்.

பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதேநேரத்தில் மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றன.

பெட்ரோல் மீதான வாட் வரியினை 27 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாகவும் டீசல் மீதான வாட் வரியினை 21.4 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும் தமிழக அரசு அதிரடியாக
உயர்த்தி உள்ளது.

 வாட் வரி எவ்வளவு

வாட் வரி எவ்வளவு

அண்டை மாநிலமான கேரளாவில் வாட் வரி பெட்ரோலுக்கு 33.97 சதவிகிதமாகவும் டீசல் 26.80 சதவிகிதமாகவும் உள்ளது. தெலுங்கானாவில் வாட் வரி பெட்ரோலுக்கு 35.20
சதவிகிதமாகவும் 27 சதவிகிதமாகவும் உள்ளது. ஆந்திராவில் பெட்ரோலுக்கு 38.46 சதவிகிதமாகவும் டீசல் 30.47 சதவிகிதமாகவும் உள்ளது. கர்நாடகாவில் பெட்ரோலுக்கு 36.50
சதவிகிதமாகவும் டீசலுக்கு 24.95 சதவிகிதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

 பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.47 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 62.63 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேசமயம், அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.13 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 60.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 தென் மாநிலங்கள்

தென் மாநிலங்கள்

பெங்களூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.76 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.63.04 ஆகவும் உள்ளது. ஹைதராபாத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.94 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.64.36 ஆகவும் உள்ளது. கேரளாவில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.61 ஆகவும் டீசல் லிட்டர் ரூ.64.52 ஆகவும் உள்ளது.

 விலை உயரும் அபாயம்

விலை உயரும் அபாயம்

பிற தென் மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக உள்ளது. இனி இந்த மாநிலங்களும் வாட் வரியை உயர்த்த உள்ளன. அப்போது தென் மாநிலங்களில் பெட்ரோல்- டீசல் விலை மேலும் அதிகரிக்கும்.

English summary
Petrol is an essential part of our day-to-day life,On a comparative note, petrol and diesel are priced at Rs 68.13 and Rs 60.18 respectively in neighbouring Puducherry, a Union Territory. Bengaluru petrol and diesel are priced at Rs 76 and Rs 63.04.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X