For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2017-18 நிதியாண்டில் தமிழக வருமான வரி வசூல் ரூ. 67,583 கோடி - 138% அதிகரிப்பு

2010-11 முதல் 2017-18 வரை 7 ஆண்டுகளில் தமிழகத்தில் வருமான வரி வசூல் 138 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் 2010-11ல் வருமான வரி வசூல் ரூ.28,409 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது ரூ. 67,583 கோடி ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வருமான வரி வசூல் கடந்த 7 ஆண்டுகளில் 138 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வரி வசூலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களை மகாராஷ்டிரா,டெல்லி,கர்நாடகா பிடித்துள்ளன.

நேரடி வரிகள் வருவாய் குறித்த விவரங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் வளர்ச்சியாகும்.

Income tax collections in Tamil Nadu up 138% in 7 years

2014-15 வரி செலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்றதாக அதற்கான வரி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது. கோடீஸ்வரர் எண்ணிக்கை 81,000 ஆக அதிகரித்துள்ளது. வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 80 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

இதில் மாநில வாரியாக வருமான வரி வசூல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 2010-11 முதல் 2017-18 வரை 7 ஆண்டுகளில் தமிழகத்தில் வருமான வரி வசூல் 138 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2010-11ல் வருமான வரி வசூல் ரூ. 28,409 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது ரூ. 67,583 ஆக அதிகரித்துள்ளது.

வருமான வரி வசூலில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களை மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா பிடித்துள்ளன. மகாராஷ்டிராவில் பெரிய அளவில் உயர்வு இல்லை. டெல்லியில் 2016-17 நிதியாண்டை விட சற்று குறைவுதான். கர்நாடகாவிலும் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ்தான் வசூல் அதிகரித்துள்ளது. எனினும் ஒட்டு மொத்த அளவில் இவை முதல் 3 இடங்களில் உள்ளன.

English summary
In 2010-11, the total income tax collection in the state was Rs 28,409 crore but in 2017-18, it increased to Rs 67,583 crore and the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X