For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் ஏற்றுமதி 0.8% சரிவு - வர்த்தகப் பற்றாக்குறை 16.67 பில்லியன் டாலர்

நவம்பர் மாதத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 16.67 பில்லியன் டாலராக உள்ளது. சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில் 15.1 பில்லியன் டாலராக இருந்தது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை இந்த ஆண்டின் நவம்பரில் 16.67 பில்லியன் டாலராக உள்ளது. நாட்டின் ஏற்றுமதி 0.8 சதவிகிதம் சரிந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியைக் குறைத்தால்தான் வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இந்தியாவில் அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால் இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும், அதுவே இறக்குமதி அதிகமாக இருந்தால் நாணய மதிப்பு சரியும்.

இதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையும் வர்த்தகச் சந்தையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும், அதோடு உலக நாடுகளின் தேவையை உணர்ந்து பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்பதும் உணர்த்தும் நிலை இது. தற்போது இந்தியா இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில் தான் உள்ளது

வர்த்தகப்பற்றாக்குறை

வர்த்தகப்பற்றாக்குறை

ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 16.3 பில்லியன் டாலர் அளவை அடைந்தது. கடந்த மே மாதத்தில் 14.62 பில்லியன் டாலர்களை எட்டியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 17.39 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 13.98 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது முந்தைய ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவாகும். அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 17.13 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததும், இந்தியாவின் இறக்குமதி அதிகமாக இருப்பது பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி மதிப்பு 15.59 சதவிகிதம் குறைந்து 2.76 பில்லியன் டாலராக இருந்துள்ளது. எனினும் எண்ணெய் இறக்குமதி 41.3 சதவிகிதம் உயர்ந்து 13.49 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக உள்ள இந்தியா தனது உள்நாட்டுத் தேவையில் சுமார் 80 சதவிகிதம் அளவை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது.

ஏற்றுமதி குறைவு

ஏற்றுமதி குறைவு

ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் 26.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நவம்பர் மாதத்தில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அதேநேரம், 43.17 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறைந்ததாலேயே இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

பற்றாக்குறை அதிகரிப்பு

பற்றாக்குறை அதிகரிப்பு

பொறியியல், நகை மற்றும் ரத்தினங்கள், பருத்தி, தோல், இரும்புத் தாது, கடல் உணவுப் பொருட்கள், முந்திரி மற்றும் அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருந்துகள், மின்னணு சாதனங்கள், ஜவுளி, கம்பளம், பெட்ரோலியம் பொருட்கள், பிளாஸ்டிக் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்க வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இது இறக்குமதிச் செலவுகளை இன்னும் அதிகரித்துள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

English summary
Growth in India’s merchandise exports slumped to 0.8% in November from 17.86% in October, the result of an unfavourable base effect, as the trade deficit narrowed benefitting from a sharp fall in crude oil prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X