For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு

2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் என பன்னாட்டு பண நிதியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : 2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் என்றும், இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சி பெற்று வருவதாகவும் பன்னாட்டு பண நிதியம் கணித்துள்ளது.

ஆசியா பசிபிக் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒவ்வோர் ஆண்டும் பன்னாட்டு பண நிதியம் அமைப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

India having fastest economic growth in 2018 says IMF

அதில், 2018ல் விரைவான பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. 2018ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% இருக்கும் என்றும், 2019ம் ஆண்டில் 7.8% இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சி அடையும் தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ் இடம் பெற்றுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு ஆசிய நாடுகளின் பங்கு கணிசமாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கடந்த 2017ம் ஆண்டு 3.6 % இருந்த நுகர்வோர் பொருட்கள் மீதான விலை உயர்வு, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 5% இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
India having fastest economic growth in 2018. International Monetary Fund says that, India is Fastly recovering from the Demonetization and GST Act Reforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X