For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக பொருளாதார வல்லரசு நாடுகள் : பிரான்ஸை பின்தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

உலக அளவில் உள்நாட்டு உற்பத்தி அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குதள்ளி 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது என உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதார நிலையில் முன்னிலை பெற்ற நாடுகளை குறித்த ஆய்வை மேற்கொண்டன.

உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், கடந்தாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.597 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

கடந்தாண்டு ஜூலை முதல் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையை எட்டி வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசு நாடுகள்

உலக வல்லரசு நாடுகள்

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான ஜிடிபியை பொறுத்து அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, அதிகமான உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு வருகிறது இதில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனா மூன்றாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. ஜெர்மனி நான்காவது இடத்திலும் இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளன.

இந்தியாவிற்கு 6வது இடம்

இந்தியாவிற்கு 6வது இடம்

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் பிரான்ஸ் இருந்து வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு நிலவரப்படி பிரான்ஸை பின்னுக்கு தள்ளி இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2.597 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.4 சதவிகித பொருளாதார வளர்ச்சி

7.4 சதவிகித பொருளாதார வளர்ச்சி

நடப்பு ஆண்டில் 7.4 சதவிகித பொருளாதார வளர்ச்சியையும், 2019ல் 7.8 சதவிகித வளர்ச்சியையும் இலக்காக கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாக சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் ஃபிரான்ஸ் 7 வது இடத்தை பெற்றுள்ளது. இதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.582 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

இந்தியாவின் முன்னேற்றம்

இந்தியாவின் முன்னேற்றம்

கடந்த 2013ஆம் ஆண்டு 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில், 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
India's gross domestic product (GDP) was valued at USD 2.597 trillion at the end of 2017 overtaking French economy, which was amounted at USD 2.582 trillion last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X