For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிசான் விகாஸ் பத்திரம்,மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் தற்போது ம

Google Oneindia Tamil News

டெல்லி: சிறு சேமிப்பு திட்டங்களின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக் கான வட்டி விகிதத்தை 0.4 சதவிகிதம் வரை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தக் காலாண்டில் பிபிஎஃப், என்எஸ்சி உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் கூடுதல் வருமானம் பெறுவார்கள்.

வங்கிகளில் அதிகரித்து வரும் வைப்பு விகிதங்களுக்கு ஏற்ப சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

India raises interest rate on small savings schemes

தேசிய சேமிப்பு பத்திரம், பொது சேமலாப நிதி உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 0.4 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் ஐந்தாண்டுக் கால டெபாசிட்களின் வட்டி விகிதம் 7.8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது சேமலாப நிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, தேசிய சேமிப்பு பத்திரத் திட்டத்துக்கான வட்டி விகிதமும் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஷ் பத்திர சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, அதன் முதிர்வுக் காலம் 118 மாதங்களிலிருந்து 112 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 0.4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 8.5 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் முதிர்வு கொண்ட சேமிப்புத் திட்டங்களின் வட்டி 0.3 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.

பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

மேலும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு கால வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதமும் 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் மாற்றமில்லாமல் 4 சதவீதத்திலேயே தொடர்கிறது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த வட்டி விகிதத்தின் பலன் கிடைக்கும்.

English summary
India has raised the interest rates on small savings schemes for the December quarter, a government statement said on Thursday, after the central bank raised interest rates last month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X