For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது.. 3.75 சத வளர்ச்சிதானா... அதை ஏற்க முடியாது!- ஐஎம்எப் கணிப்பை மறுக்கும் இந்தியா

By Shankar
Google Oneindia Tamil News

IMF
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு 3.75 சதவீதம்தான் இருக்கும் என்ற ஐஎம்எப்பின் கணிப்பை மறுத்துள்ளது இந்தியா. இந்த ஆண்டு 5 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

திட்டக்குழுவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.75 சதவீதம் மட்டுமே என சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் கணித்துள்ளது. இந்தியாவின் பல துறைகளிலும் வளர்ச்சிப் போக்கு தடைபட்டுள்ளதால் இப்படிக் கணித்துள்ளதாக காரணம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 5 சதவீதமாகக் குறைந்துள்ளதையும் ஐம்எப் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதனை மத்திய தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மறுத்துள்ளார். பல துறைகளிலும் மீட்சிப் போக்கு காணப்படுவதால், இந்த ஆண்டு 5.1 சதவீத வளர்ச்சி இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஏற்றுமதி 11.5 சதவீதமாகவும், இறக்குமதி 18 சதவீதமாகவும் குறைந்துள்ளதை ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திட்டக் கமிஷனும் ஐஎம்எப்பின் கணிப்பை நிராகரித்துள்ளது. முன்னதாக திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஐஎம்எப் அறிக்கைக்கு கருத்து கூற மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

English summary
India on Wednesday rejected IMF's growth projections of 3.75 per cent for the current fiscal as "pessimistic", saying that the economy is turning around and the GDP expansion will exceed 5 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X