For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் ஜூலை மாத சில்லறைப் பணவீக்கம் 4.17% மொத்த பணவீக்கம் 5.09%

ஜூலை மாதத்திற்கான சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 4.17 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. மொத்த விலை பணவீக்க குறியீடு 5.09 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 4.92 சதவிகிதமாக இருந்தது. அது ஜூலை மாதத்தில் 4.17 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை ஜூலை 13ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் காய்கறிகள், பழங்கள் உட்பட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் கடந்த ஜூன் மாதம் 4.85% ஆக இருந்த சில்லறை விற்பனை பணவீக்கம், ஜூலை மாதத்தில் 4.17% ஆக சரிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த விகிதம் 5% அளவுக்கு உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஜூலையில் இந்த விகிதம் 4.51% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கு மாறக, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவானதாக வீழ்ச்ச கண்டுள்ளது. உணவுப் பொருட்கள் பணவீக்கமும் காய்கறி மற்றும் சர்க்கரை விலை வீழ்ச்சியால் 1.37% குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இலக்கு

ரிசர்வ் வங்கியின் இலக்கு

ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் பணவீக்கம் குறைந்திருந்தாலும் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. ஜூன் மாதத்தில் 2.91 சதவிகிதமாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜூலை மாதத்தில் 1.37 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள்

நுகர்வோர் பொருட்கள்

காய்கறிகளின் விலையைப் பொறுத்தவரையில், ஜூன் மாதத்தில் 7.8 சதவிகிதம் உயர்ந்திருந்த அவற்றின் விலை ஜூலையில் 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல, பருப்பு வகைகளின் விலையும் 8.91 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 7 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்ததாகத் தெரிவித்திருந்தது. குறிப்பாக, உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் சென்ற ஆண்டை விட 6 சதவிகிதம் கூடுதலான வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தவிலைக்குறியீடு

மொத்தவிலைக்குறியீடு

சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் போல மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க குறியீடு 5.09 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதுவே ஜூன் மாதம் 5.77 சதவிகிதமாகவும் சென்ற ஆண்டு இதே நேரத்தில் 1.88 சதவிகிதமாகவும் இருந்தது.

ரெப்போ ரேட்

ரெப்போ ரேட்

ரிசர்வ் வங்கி 4% பணவீக்க எல்லை என நிர்ணயித்திருக்கும் நிலையில் கடந்த 9 மாதங்களாக பணவீக்கம் அதற்கு மேலாவே உள்ளது. கடந்த இரண்டு கொள்கைக் கூட்டங்களிலும் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Consumer price inflation in July 4.17 percent compared with the same month last year, declining from the five-month high of 4.9 percent in June, according to data from the Central Statistics Office. Headline inflation slowed for the first time after rising for the past four months. A Bloomberg poll of economists had expected inflation at 4.49 percent in July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X