For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அரசுக்கு நல்ல செய்தி.... நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2%

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 7.2%ஆக அதிகரித்துள்ளது. இது மத்திய அரசுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும் 2-வது காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருந்தது. முதலாவது காலாண்டில் 5.7% ஆகவும் 2-வது காலாண்டில் 6.5% ஆகவும் பொருளாதார வளர்ச்சி இருந்தது.

India's economy grows at 7.2%

இதனால் மத்திய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நிலையில் 3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த காலாண்டுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்திருக்கும் என உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's GDP for October - December quarter at 7.2%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X