For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் ஏற்றுமதி 2016 டிசம்பரில் 5.72 % உயர்வு

2016 டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதித் துறையில் 5.72% வளர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களிலும் ஏற்றுமதியின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 5.72% அளவுக்கு அதிகரித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் முடிவில், நாட்டின் இறக்குமதி 0.5% உயர்வுடன் உள்ளது. அதேசமயம், ஏற்றுமதி 5.72% உயர்வுடன், 23.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதன்மூலமாக, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 10.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

India's exports grow by 5.72% in December 2016

கடந்த டிசம்பரில் ஏற்றுமதியின் அளவு 23.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 5.72% அதிகரிப்பாகும். இது கடந்த 21 மாதங்களில் இல்லாத புதிய ஏற்றம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேசமயம் இறக்குமதியும் கடந்த டிசம்பர் மாதத்தில் 34.25 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 0.46% அதிகரிப்பாகும். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை 10.36 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதேபோல உற்பத்தித்துறையில் உற்பத்தியும் 5.7% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 280 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அதிகரிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Indian exports grew by 5.72% to $ 23.885 billion in December 2016 from $ 22.593 billion in the same month of the previous year, an official statement said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X