For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்த விலை பண வீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.

உணவுப் பண்டங்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation) கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்கம் சற்று குறைந்து 2.47 சதவிகிதமாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவானதாகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த விலை பண வீக்கம் 5.11 சதவிகிமாகவும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.48 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை குறைந்ததால் மொத்த விலை பண வீக்கம் 2.47 சதவிகிதமாக உள்ளது

India Wholesale Price Index Change

கடந்த எட்டு மாதங்களில் முதல் முறையாக உணவு பொருட்கள் விலை சரிவை சந்தித்துள்ளன. உணவு பொருட்கள் மீதான பண வீக்கம் கடந்த மார்ச்சில் 0.29 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் இது 0.88 சதவிகிதமாக இருந்தது.

பருப்பு விலை 20.58 சதவீதம், காய்கறிகள் 2.7 சதவீதம், கோதுமை 1.19 சதவீதம், முட்டை, இறைச்சி மற்றும் மீன்கள் 0.82 சதவீதம் விலைகுறைந்துள்ளன என மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வெங்காயம் விலை 42.22 சதவிகிதம், உருளைக்கிழங்கு 43.25 சதவிகிதம் என தொடர்ந்து உச்சத்தில் உள்ளன. உற்பத்தி பொருட்களின் விலை 3.03 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல் எரிபொருட்கள் விலை 3.81 சதவிகிதத்தில் இருந்து 4.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதே போல சில்லரை விலை பணவீக்கம் (Consumer Price Index)5 மாதங்களில் இல்லாத அளவாக 4.28 சதவிதமாக குறைந்துள்ளது.இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.4 சதவிகிதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களின் விலைகுறைவு காரணமாகவே மார்ச் மாத சில்லறை விற்பனை விலை பணவீக்கம் குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலை உற்பத்தி விகிதம், கடந்த பிப்ரவரி மாதம் 7.1 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து இக்ரா நிறுவனம் கூறுகையில், சர்வதேச சந்தையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

மொத்த விலை பணவீக்கம், சில்லரை விலை பணவீக்கம் சரிவு இந்தியாவின் தொழில் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 7.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது இந்த நிலையில் பங்குச் சந்தையிலும் ஏற்றமான நிலையே காணப்பட்டது.

English summary
Wholesale prices in India rose by 2.47 percent year-on-year in March of 2018, after a 2.48 percent gain in the prior month and below market estimates of 2.58 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X