For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவிகிதமாக உயர்வு - சீனாவை முந்தியது

2017-2018 நிதி ஆண்டிற்கான 4ஆம் காலாண்டின் ஜிடிபியை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது அதில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவீதத்தினை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் இருக்கிறது. சீனாவை வீழ்த்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. கடந்த ஏழு காலாண்டுகளில் இதுவே மிகப்பெரிய வளர்ச்சி ஆகும். இந்த நிலையில் உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் உள்ளது.

மார்ச் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாகும். இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவிகிதத்தினை எட்டியுள்ளது

ஜிடிபி அதிகரிப்பு

ஜிடிபி அதிகரிப்பு

2017-2018 நிதி ஆண்டிற்கான 4ஆம் காலாண்டின் ஜிடிபி தரவுகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது அதில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவிகிதத்தினை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 2017-18 ஆண்டின் முதல் காலாண்டில் 5.6% ஆக இருந்த, உள்நாட்டு மொத்த உற்பத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் முறையே 6.3% ஆகவும், 7.0% ஆகவும் இருந்தது. இப்போது, நான்காவது காலாண்டில் 7.7% ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியா முன்னேற்றம்

இந்தியா முன்னேற்றம்

2017-2018 நிதி ஆண்டில் சராசரியாக 6.8 சதவீத ஜிடிபிஐ இந்தியா பெற்றுள்ளது. 2014-2015 நிதி ஆண்டில் 7.4 சதவிகிதமாகவும், 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவிகிதமாகவும், 2016-2017ஆம் ஆண்டில் 7.1 சதவிதமாகவும் இந்தியாவின் ஜிடிபி இருந்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஏழு காலாண்டுகளில் இதுவே மிகப்பெரிய வளர்ச்சி ஆகும்.

வல்லுநர்கள் கருத்து

வல்லுநர்கள் கருத்து

உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் இருக்கிறது. மார்ச் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாகும். ராய்ட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சராசரியாக 7.3 சதவிகித அளவுக்கு மட்டுமே வளர்ச்சி இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

கடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் முறையே 5.6 சதவிகிதம், 6.3 சதவிகிதம் மற்றும் 7 சதவிகித வளர்ச்சியை இந்தியா அடைந்திருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 2017-2018 இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவிகிதமாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 2016-17 வளர்ச்சி விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானத்துறை

கட்டுமானத்துறை

உற்பத்தித் துறையில் 9.1 சதவிகித வளர்ச்சி இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் 6.1 சதவிகித வளர்ச்சி மட்டுமே இருந்தது. உற்பத்தித் துறை வளர்ச்சி ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர விவசாயத் துறையில் 4.5 சதவிகிதம் மற்றும் கட்டுமானத் துறையில் 11.5 சதவிகித வளர்ச்சி அடைந்திருப்பதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரூ. 5.91 லட்சம் கோடி

ரூ. 5.91 லட்சம் கோடி

கடந்த நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 3.5 சதவீதமாக இருக்கிறது. நிதிப் பற்றாக்குறைக்கு இலக்காக ரூ.5.94 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. நிதி ஆண்டு முடிவில் ரூ.5.91 லட்சம் கோடியாக நிதிப்பற்றாக்குறை இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கு பாதிக்கப்படவில்லை.

English summary
The Indian economy grew 7.7% during the period from January to March, topping the pace of the previous quarter for India to retain its position as the fastest growing major economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X