For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடப்பாண்டில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிந்தது.. அதிர்ச்சி புள்ளி விவரம் இதோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி, நடப்பாண்டில் 2.2 சதவீதம் என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளது. மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவலில் இந்த விவரம் இடம் பெற்றுள்ளது.

ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தின் தொழில்துறை உற்பத்தியை கணக்கிட்டு இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.5 சதவீதமாக இருந்தது.

உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் பணித்திறன் குறைவு இதற்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

தொழில்துறை உற்பத்தி

தொழில்துறை உற்பத்தி

தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), மூலமாக தொழிற்சாலை உற்பத்தி அளவிடப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இது 4.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. மாத அடிப்படையை மட்டும் எடுத்து பார்த்தால், செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.14 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.

தொழில்துறை உற்பத்தி குறைந்தது

தொழில்துறை உற்பத்தி குறைந்தது

நடப்பு, 2017-18ம் நிதியாயாண்டில் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 5.5 சதவீதமாக இருந்தது.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் உற்பத்தி துறைதான் சுமார் 77.63 சதவீத இடத்தை பிடிக்கும். இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு 4.8 சதவீதமாக இருந்த உற்பத்தி துறை வளர்ச்சி இப்போது, 2.5 சதவீதமாக குறைந்துள்ளது.

நுகர்பொருள் உற்பத்தி

நுகர்பொருள் உற்பத்தி

நுகர் பொருட்கள் உற்பத்தி நடப்பாண்டில் 1.9 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இக்காலகட்டத்தில் அது 6 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது.அதேநேரம், மின்சார உற்பத்தி 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 3 சதவீதமாக இருந்தது.

சுரங்கம் பூஜ்யம்

சுரங்கம் பூஜ்யம்

சுரங்க தொழில் ஏறத்தாழ பூஜ்யம் நோக்கி வந்துவிட்டது. அதாவது இப்போது அது 0.2 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் சுரங்க துறை 1 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது. மருந்து உற்பத்தி, ரசாயன உற்பத்தி மற்றும் தாவரவியல் உற்பத்தி நல்ல வளர்ச்சியை காட்டுகிறது. இவற்றின் வளர்ச்சி 23 சதவீதமாக உள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி 12.8 சதவீதம் வளர்ச்சியுடன் அடுத்த நிலையில் உள்ளது.

புகையிலை, ரப்பர்

புகையிலை, ரப்பர்

'பிற உற்பத்தி' பிரிவின் உற்பத்தி நெகட்டிவ் குறியீட்டில் போக ஆரம்பித்துள்ளது. புகையிலை உற்பத்தி மைனஸ் 20.9 சதவீதமாக உள்ளதது. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியும் மைனஸ் 16.1 என்ற அளவில் உள்ளது.

English summary
Industrial production for October stands at 2.2 per cent higher as compared to the level in October 2016, data released by the Central Statistics Office said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X