For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் 2100 பேரை பணியமர்த்த ஆளெடுக்கும் இன்போசிஸ் நிறுவனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் 2வது மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் அமெரிக்காவில் 2100 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளது. இதில் 600 பேர் சாதாரண பட்டதாரிகள் ஆவர்.

இதுகுறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆலோசனை, விற்பனை, டெலிவரி ஆகிய பணிகளுக்காக 1500 பேரை பணியமர்த்த உள்ளோம். கூடுதலாக 600 பட்டதாரிகள், மாஸ்டர் பட்டதாரிகளையும் தேர்வு செய்யவுள்ளோம். இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த ஆளெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படு்ம்

Infosys to hire over 2,100 in US, including 600 graduates

இவர்கள் மூலம் உள்ளூரச் சந்தையில் எங்களது பணிகளை விரைவுபடுத்த உதவும். மேலும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் வழி வகுக்கும்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலிருந்து நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் 300 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளது இன்போசிஸ். அவர்கள் டிஜிட்டல், பயோடேட்டா, அனாலிடிகல் மற்றும் கிளவுட் பிரிவில் பணியமர்த்தப்படுவர். மேலும் ஆலோசனை பணிகளுக்காக 180 பேர் வரை அமெரிக்காவில் தேர்வு செய்யப்படவுள்ளனராம். தற்போது உள்ள குழுக்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்றுவர்.

இதுகுறித்து அமரெிக்காவுக்கான இன்போசிஸ் நிறுவனத்தின் எச்.ஆர். தலைவர் பெக்கி தயோல் கூறுகையில், "அடுத்த தலைமுறை சேவை நிறுவனமாக எங்களை மாற்ற இந்த புதிய பணியமர்வு உதவும். தொழில்நுட்பம் மேலும் வலுவடையும் என்று நம்புகிறோம்" என்றார்.

English summary
Announcing a major recruitment drive, Infosys, India's second-largest IT services exporter on Thursday said that it will be hiring over 2,100 people in US, in order to support the growth of its business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X